“அரசியல் சாணக்கியர் அமித் ஷா கையேந்தி நிற்கிறார்” – காங்கிரஸ் கடும் விமர்சனம்

புதுடெல்லி: “அரசியல் சாணக்கியர் அமித் ஷா கையேந்தி நிற்கிறார்” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், “அரசியல் சாணக்கியர் என்று சொல்லிக் கொண்ட அமித் ஷா, கடைசியில் தான் விரித்த வலையிலேயே மிகவும் மோசமாக மாட்டிக்கொண்டார். ஒவ்வொரு அடியிலும் பொதுமக்களை முட்டாளாக்கி, மிகப்பெரிய முதலாளிகளுக்கு சவால் விடும் ராஜாக்களின் ராஜா, இன்று கிண்ணத்துடன் கையேந்தி பல கதவுகளைத் தட்டி, … Read more

Coolie: ஜெயிலரில் ரம்யா கிருஷ்ணன்.. கூலி படத்துல ‘தக் லைஃப்’ நடிகையை தட்டித் தூக்கிய ரஜினிகாந்த்?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி திரைப்படம் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மோடி மீண்டும் பிரதமராக உள்ள நிலையில், அந்தப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தேர்தலுக்கு முன்பாக நடிகர்

இமாசல பிரதேசம்: அரச குடும்பம் அல்லாத, எம்.பி.யாக தேர்வான ஒரே பெண் கங்கனா ரணாவத்

சிம்லா, இமாசல பிரதேசத்தின் மண்டி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டவர் நடிகை கங்கனா ரணாவத். இவர், தன்னுடைய போட்டியாளரான காங்கிரசை சேர்ந்த விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், இமாசல பிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வான 4-வது பெண் என்ற பெருமையை கங்கனா ரணாவத் பெறுகிறார். இதுதவிர, அரச குடும்பம் சாராத ஒரே பெண் வெற்றியாளரும் ஆவார். இதற்கு முன் 1952-ம் ஆண்டு மண்டி தொகுதியில் ராஜகுமாரி அம்ரித் கவுர் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் ரைபகினா அதிர்ச்சி தோல்வி

பாரீஸ், பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ரைபகினா, 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற 3வது … Read more

விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்

நியூயார்க், போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருந்தனர். ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பயணம் தடைபட்டது. தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் இன்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸை சுமந்து கொண்டு விண்வெளி நிலையம் … Read more

தூத்துக்குடியில் 55% வாக்குகள் பெற்ற கனிமொழிக்கு காத்திருக்கும் சவால்கள்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள கனிமொழி 55 சதவீத வாக்குகளைப் பெற்று தனது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்று, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2-வது முறையாக களம் கண்ட திமுக வேட்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மொத்தம் 5,40,729 வாக்குகள் கிடைத்துள்ளன. 55.26 சதவீதம்: இதன் மூலம் கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் … Read more

மக்களவைத் தேர்தலில் வென்ற 4 இளம் வேட்பாளர்களும் பின்புலமும்

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 25 வயதுக்குட்பட்ட 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சஞ்சனா ஜாதவ், லோக் ஜனசக்தி கட்சியின் சாம்பவி சவுத்ரி, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரிய சரோஜ் ஆகியோர் எம்.பிக்கள் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக … Read more

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி

டெல்லி மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ். சமாஜ்வாடி, கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணி’ என்று ஓர் அணியை அமைத்தன. தமிழகத்தில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய … Read more

காதலர்களுக்குள் குட்டையை குழப்பிய உர்ஃபி ஜாவேத்.. சன்னி லியோன் ரியாலிட்டி ஷோவில் அனல் தெறிக்குது!

சென்னை: எம் டிவி மற்றும் ஜியோ டிவி ஓடிடி பிளாட்ஃபார்மில் சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 15 ஒளிபரப்பாகி வருகிறது. அதன் லேட்டஸ்ட் எபிசோடில் வில்லாவில் ஜாலியாக டேட்டிங் செய்து கொண்டிருந்த காதலர்களுக்கு மத்தியில் கண்ணி வெடி வைத்து குட்டையை குழப்பி விட்டார் மிஸ்சீஃப் மேக்கரான உர்ஃபி ஜாவேத். இந்த

பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும் – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இன்று மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மல்லிகாஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்கள் கூட்டணிக்கு கிடைத்த அமோக ஆதரவிற்கு இந்தியா கூட்டணியின் அங்கத்தினர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பா.ஜ.க.வுக்கும், அவர்களின் வெறுப்பு, ஊழல் அரசியலுக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இது பிரதமர் நரேந்திர மோடியின் … Read more