ரோகித் சர்மா அபாரம்: அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி

நியூயார்க், டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் டெலானி அதிரடியாக விளையாடி அயர்லாந்து கவுரமான நிலையை எட்ட உதவினார். வெறும் … Read more

போயிங் விண்கலத்தில் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப நாசா மீண்டும் முயற்சி

கேப் கேனவெரல், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் உதவியுடன், நாசாவின் விமானிகளான பட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை அனுப்ப முடிவு செய்தது. எனினும், ராக்கெட் தொடர்பான கோளாறுகளால் 2 முறை இந்த திட்டம் தள்ளி போனது. 3-வது முறையாக இந்த திட்டம் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர்கள் இருவரும் குறைந்தது ஒரு … Read more

பாஜகவின் தேர்தல் வெற்றியை கொண்டாடிய இலங்கை அமைப்புகள் @ யாழ்ப்பாணம்

ராமேஸ்வரம்: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்தும் அங்குள்ள அமைப்புகள் கொண்டாடின. நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 293 தொகுதிகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பாஜகவின் … Read more

தேசிய அளவில் காங்கிரஸ் வாக்கு வங்கி உயர்வு; பாஜகவுக்கு சற்றே சரிவு!

புதுடெல்லி: 2019 தேர்தல் உடன் ஒப்பிடுகையில் 2024 மக்களவைத் தேர்தலில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2019-ல் 19.49% என்ற அளவில் இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் 21.19% ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 2% சதவீதம் காங்கிரஸின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரம், பாஜகவை பொறுத்தவரை ஒரு சதவீதம் சரிவை கண்டுள்ளது. தேர்தல் ஆணைய தரவுப்படி, பாஜக மொத்தமாக 36.56 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதுவே கடந்த 2019 தேர்தலில் … Read more

'கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி…' நாட்டை காக்கும் 40க்கு 40 – ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?

MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரத்துக்கு கடிவாளம் போட்ட இந்தியா கூட்டணி வெற்றி : மு க ஸ்டாலின்

சென்னை இந்தியா கூட்டணியின் வெற்றி சர்வாதிகாரத்துக்கு கடிவாளம் போட்டுள்ளது என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடித்ததில் முதல்வர் மு க ஸ்டாலின் ”அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றிக்களத்தின் நன்றி மடல்.மகத்தான வெற்றியை தி.மு.க.வுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள் தொண்டர்களாகிய நீங்களும்தான். தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினரின் பங்களிப்புடன் … Read more

Aranmanai 4 OTT: ஓடிடி ரசிகர்களை கடுப்பாக்கிய சுந்தர் சி.. அரண்மனை 4 எப்போ ஸ்ட்ரீம் ஆகுது தெரியுமா?

சென்னை: சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் ஓடிடி ரிலீஸ் ஒரேயடியாக தள்ளிப் போய் ஓடிடி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. அரண்மனை 4 படத்தை பலர் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்த்தாலும் ஓவர்சீஸ் ரசிகர்கள் மற்றும் ரிப்பீட் ஆடியன்ஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு

புதுடெல்லி, புதுடெல்லியில் பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துனர். அதன்படி, 3வது முறையாக பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா,ராஜ்நாத் சிங், உள்பட மொத்தம் 21 தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காலதாமதம் … Read more

லெபனான் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசிய இஸ்ரேல்.. மனித உரிமைகள் அமைப்பு தகவல்

பெய்ரூட்: இஸ்ரேல் ராணுவத்துக்கும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளி குழுவினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெறுகிறது. எல்லையில் நடைபெற்று வரும் இந்த மோதல்களில் லெபனானில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் போராளிகள் ஆவர். 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகள் அல்லாதவர்களும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் கடந்த அக்டோபர் மாதம் முதல் 15 ராணுவ வீரர்களும் 10 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். எல்லையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், மோதலில் பாதிக்கப்பட்ட தெற்கு லெபனானில் இஸ்ரேல் … Read more