Month: June 2024
“நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம்” – சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
புதுடெல்லி: ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று (ஜூன் 5) மாலை இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த கூட்டம் முடிந்து திரும்பி வரும்போது டெல்லி விமான நிலையத்தில் ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை … Read more
“நாம் வெட்கப்பட எதுவும் இல்லை” – பிஜேடி கட்சியினர் முன் நவீன் பட்நாயக் உருக்கம்
புவனேஸ்வர்: 24 ஆண்டுகால ஆட்சி குறித்து நாம் வெட்கப்பட எதுவும் இல்லை என பிஜேடி எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன் நவீன் பட்நாயக் உருக்கமாக தெரிவித்தார். மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசாவின் … Read more
வெற்றிகரமான தோல்வி… சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் – அண்ணாமலையின் திட்டம் இதுதான்!
BJP NDA Vote Percentage In Tamil Nadu: பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாவிட்டாலும், அது அவர்களுக்கு வெற்றிகரமான தோல்வியாகவே அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
தேர்தல் வெற்றி சான்றிதழை கருணாநிதி சமாதியில் வைத்து கனிமொழி வணக்கம்
சென்னை திமுக வேட்பாளர் கனிமொழி தனது தேர்தல் வெற்றி சான்றிதழை கருணாநிதி சமாதியில் வைத்து வனங்கி மரியாதை செலுத்தி உள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., அ.தி.மு.க. சார்பில் சிவசாமி வேலுமணி, பா.ஜனதா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன், நாம் தமிழர் சார்பில் ரொவினா ரூத் ஜேன் உள்பட 28 வேட்பாளர் போட்டியிட்டனர். இத்தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி … Read more
முடிவுக்கு வந்த காத்திருப்பு; விஜய் சேதுபதியின் 50வது படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு-குஷியில் ரசிகர்கள்!
சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் எல்லோராலும் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அதில் விஜய் சேதுபதி பெயர் டாப் லிஸ்ட்டில் இருக்கும். சினிமாவில் நடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து, சைடு கேரக்ட்டர்களில் நடித்து, கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் தனக்கு
பா.ஜனதா ஆட்சி அமைக்க நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு
புதுடெல்லி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான … Read more
Peaky Blinders: "மீண்டும் தாமஸ் ஷெல்பியாக கிலியன் மர்ஃபி; தீப்பொறிகள் பறக்கும்" – இயக்குநர் ஹார்பர்
ஸ்டீபன் நைட் எழுத்தில் ஓட்டோ பாதர்ஸ்ட், டாம் ஹார்பர் இயக்கத்தில் கிலியன் மர்ஃபி, சாம் நெய்ல், ஹெலன் மெக்ரோரி உள்ளிட்டோர் நடிப்பில் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியான க்ரைம் திரில்லர் வெப்சீரிஸ் ‘Peaky Blinders’. 2013ம் ஆண்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடியான இந்த கேங்ஸ்டர் வெப்சீரிஸுக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இதன் வரவேற்பை அடுத்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். … Read more
நெல்லையில் நில அதிர்வு ஏற்பட்டதாக பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்: ஆட்சியர் விளக்கம்
திருநெல்வேலி: கன்னியாகுமரி பகுதியில் புதன்கிழமை மாலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அதேநேரத்தில் கூடங்குளம் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை 6.11 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. கூடங்குளத்தில் 2 அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டுவரும் நிலையில் அப்பகுதியில் … Read more
“பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக…” – இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் கார்கே விவரிப்பு
புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இது ஒரு தெளிவான தார்மிக தோல்வி என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் மோடிக்கு இது ஒரு பெரிய அரசியல் தோல்வி. எனினும், அவர் மக்களின் விருப்பத்தை தகர்ப்பதில் பிடிவாதமாக இருக்கிறார்” என்று தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று (ஜூன் 5) மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே … Read more