மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்! கனிமொழி பாஜகவில் சேருவாரா? 0/40க்கு பிறகு அண்ணாமலை கேள்வி!

Annamalai Interview After 0/40 In Election: தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்று கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து மக்கள் பணி மூலம் 2026ல் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்…

வரும் 7 ஆம் தேதி பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்

டெல்லி பாஜக கூட்டணி முதல்வர்களின் கூட்டம் வரும் 7 ஆம் தேதி நடைபெற் உள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.க. மட்டும் 240 தொகுதிகளை கைப்பற்றியது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், … Read more

இது திராவிட மண்.. சத்யராஜ் மகள் போட்ட அதிரடி போஸ்ட்.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

சென்னை: லோக் சபா தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், பாஜகவுக்கு தனது எதிர்ப்பை காட்டும் விதமாக நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அரசியலில் குதிக்கப் போகிறார் என சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகின. நியூட்ரிஷியனாக இருக்கும் அவர்

இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து..

பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் செழுமையில் இந்திய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலவும் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த வெற்றி உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“விலங்குகளைப் போலதான் நடத்துவார்கள்"- கசப்பான அனுபவம் பகிர்ந்த உர்ஃபி ஜாவேத்

இந்தி சீரியல்களில் நடித்து வந்த உர்ஃபி ஜாவேத் கடந்த 2021-ம் ஆண்டு ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1-ல் கலந்துகொண்டு பிரபலமானவர். பிக் பாஸிலிருந்து ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இப்படிக் கவர்ச்சியான உடைகளை அணிவதால் பலரது விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் உர்ஃபி ஜாவேத்  ஆளாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உர்ஃபி ஜாவேத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். … Read more

5 தொகுதிகளிலும் தோல்வி: பிரேமலதா தலைமையிலான தேமுதிக மீண்டெழுமா?

சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தேமுதிக தோல்வி அடைந்துள்ளது. பிரேமலதா தலைமையிலான தேமுதிக மீண்டு வருமா என கேள்விகள் எழுந்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. இந்த முறை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன. நான்கு முனை போட்டியில் திமுக கூட்டணியானது மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இத்தேர்தலில் அதிமுக … Read more

எல்.முருகன் முதல் ஸ்மிருதி இரானி வரை: தேர்தலில் தோல்வியுற்ற மத்திய அமைச்சர்கள்!

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இந்தத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள், ஸ்டார் வேட்பாளர்கள் என்று அறியப்பட்ட ஸ்மிருதி இரானி, எல்.முருகன் உள்ளிட்ட பலரும் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளனர். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற அறைகூவலுடன் தேர்தலை சந்தித்தது பாஜக. ஆனால் பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாஜக இந்த தேர்தலில் பல அமைச்சர்களை களம் இறக்கியது. இதில், ஸ்மிரிதி ராணி உள்பட பலர் … Read more

அண்ணாமலை பொய்தான் பேசுவார்-அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி!

அண்ணாமலை பொய்தான் பேசுவார். எந்த காலத்திலும் திராவிட ஆட்சி தான் நடைபெறும். -அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி  

எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி – ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்

முன்பு டிவிட்டர் என அழைக்கப்பட்ட எக்ஸ் தளம் எலான் மஸ்க் வசம் இருக்கிறது. இப்போது அதன் கன்டென்ட் கொள்கையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆபாச படங்கள் சட்டப்பூர்வமாக இந்த தளத்தில் அனுமதிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) கன்டென்டுகளும், அனிமேஷன் வீடியோக்களும் அனுமதிக்கும் வகையில் புதிய கொள்கை மாறுபாடு கொண்டு வரப்பட்டிருக்கிறது. வயது வந்தோர் நிர்வாணம் அல்லது பாலியல் தொடர்பான இத்தகைய கன்டென்டுகளை தாராளமாக … Read more

மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்னாவிஸ் பதவி விலகல்

மும்பை மகாராஷ்டிராவில் பாஜக தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகி உள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க.வை பின்னுக்கு தள்ளியது. இங்குள்ள 42 தொகுதிகளில் 9 … Read more