தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு இத்தாலிய பிரதமர் மெலோனி வாழ்த்து

ரோம்: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி . இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இத்தாலி மொழியில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், தேர்தல் வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியா – இத்தாலி நாடுகளுக்கு இடையேயான நட்பை வலுப்படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து செயல்படும். நம் தேசங்களின், நம் மக்களின் நலனுக்கான பல்வேறு … Read more

விருதுநகரில் விஜயபிரபாகரன் தோல்வி அடைந்த வாக்கு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

Tamil Nadu Lok Sabha Election Result: விருதுநகர் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்.  

தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள்…

சென்னை: நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி,  தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெறுகின்றன. 18வது மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில்,  4 முனை போட்டி நிலவியது. திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் … Read more

ஒடிசாவின் முதல் பாஜக முதலமைச்சர் ஆகப்போவது யார்? பாஜகவின் அதே ஃபார்முலா? ரேஸில் 6 தலைவர்கள்!

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. பாஜக சார்பில் ஒடிசாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தது. ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு Source Link

மீண்டும் ரோலக்ஸ்?.. லாரன்ஸ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா சூர்யா?

சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. அவரது நடிப்பில்

ஏதெரின் 450 அபெக்சின் விலை ரூ.6,000 வரை உயர்ந்தது

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மிக வேகமான மற்றும் பிரீமியம் வசதிகளை பெற்ற 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை ரூ.6,000 வரை உயர்ந்துள்ளதால் புதிய எக்ஸ்ஷோரூம் சென்னை விலை ரூ.1,94,945 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு எடிசனாக இந்நிறுவனத்தின் 10 ஆண்டுகால கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட 450 அபெக்சில் விற்பனையில் இருக்கின்ற 450 சீரியஸ் ஸ்கூட்டர் மாடல்களிலும் இருந்து பெறப்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும் சில கூடுதல் வசதி அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ உள்ளிட்ட … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவார்

வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு – கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும் எனவே, மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். அத்துடன், சீரற்ற … Read more

நம்பி இறங்கிய `டிடிவி’; கைகொடுக்காத கூட்டணி – தேனியில் `தங்கம்’ ஜொலித்தது எப்படி?!

தேனி மக்களவைத் தொகுதி பெரியகுளம் (தனி) தொகுதி, ஆண்டிபட்டி, போடி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதாலும், போடி தொகுதியில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றதாலும், டி.டி.வி.தினகரன் முதல் முறை போட்டியிட்டு எம்.பி., ஆக தேர்வாகிய தொகுதி என்பதாலும் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற தொகுதியாக தேனி உள்ளது. தங்க தமிழ்ச்செல்வன் கடந்த எம்.பி தேர்தலின் … Read more

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் மக்களவை பொது தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியை பொருத்தவரை, திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த இண்டியா கூட்டணி, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக, … Read more

மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உதவிய 2 முடிவுகள்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர் தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பாஜக எடுத்த 2 முடிவுகள்தான் இப்போது ஆட்சி அமைப்பதற்கு பேருதவியாக அமைந்துள்ளது. முதலாவதாக, என்டிஏ கூட்டணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை (டிடிபி) மீண்டும் இணைத்து கொண்டது முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த டிடிபியும் ஜெகன் மோகன் தலைமையிலான ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும்பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கின. எனினும், … Read more