சீட்டுக்கட்டாய் சரிந்த பங்குச் சந்தை… 4000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் குறியீடு..!!

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது, பிஎஸ்இ சென்செக்ஸ் 6000 புள்ளிகள் சரிந்தது. அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 1900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 

தமிழக முதல்வர் ஸ்டாலின் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து

சென்னை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெர்வித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 இல் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும். ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளில் 158 இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. கூட்டணி இல்லாமலே … Read more

Train: சூட்டிங்கை நிறைவு செய்த டிரெயின் படக்குழு.. சூட்டிங் ஸ்பாட்டில் மக்களிடம் கத்திய மிஷ்கின்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மிஷ்கினுடன் முதல்முறையாக இணைந்துள்ள படம் ட்ரெயின். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உடன் சிம்பிள் ஹயாத்தி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான டிரெயின் செட் போடப்பட்டு சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சில காட்சிகள் மேட்டுப்பாளையத்தின் ரியல் ட்ரெயின் ட்ராக்கில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. ட்ரெயின் படத்தின் சூட்டிங் தற்போது

40 தொகுதிகளுக்கே சிலர் வெற்றி கொண்டாட்டத்தில்; ஆனால்… ஜே.பி. நட்டா

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் காணப்படுகிறது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. இதில், பா.ஜ.க. சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக … Read more

இது நியாயமற்றது – டி20 உலகக்கோப்பை அட்டவணை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கை வீரர்

நியூயார்க், டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இரவு நியூயார்க்கில் நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 78 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டை … Read more

இம்ரான் கானின் கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட்டு உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 71) மீது கிட்டத்தட்ட 200 வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில், பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். இது இம்ரான் கானுக்கு மிகப்பெரிய … Read more

கோவையில் 1.18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கணபதி ராஜ்குமார் வெற்றி – அண்ணாமலை இரண்டாம் இடம்!

கோவை: கோவை மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 1 லட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக் வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். கோவை மக்களவைத் தொகுதியில் கணபதி ப.ராஜ்குமார் (திமுக), சிங்கை ஜி.ராமச்சந்திரன் (அதிமுக), அண்ணாமலை (பாஜக), கலாமணி ஜெகநாதன்(நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் உட்பட 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 21 லட்சத்து 06 ஆயிரத்து 128 … Read more

“முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏன்?” – தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், “வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படுவது ஏன்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், “தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஏன் தேர்தல் முடிவுகள் வேகமாக புதுப்பிக்கப்படவில்லை. கடந்த சில மணிநேரமாக ஏன் இந்த செயல்முறை மெதுவாக உள்ளது? வேகத்தை குறைக்க உத்தரவு எங்கிருந்து வந்தது?. … Read more

Lok Sabha Election Result 2024 : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பாஜகவின் வெற்றி கனவை தவிடுபொடியாக்கியது எப்படி?

Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சியால் பெறமுடியவில்லை. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 27க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  

மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா தியானம்

சென்னை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அவர் மனைவி பிரேமலதா தியானம் செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. விருதுநகர் தொகுதியில் தி.மு.க. … Read more