64.20 கோடி வாக்காளர்களுடன் மக்களவைத் தேர்தல் உலக சாதனை: தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல், 64.20 கோடி வாக்காளர்களுடன் உலக சாதனை படைத்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்திய தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் … Read more

Kanniyakumari TN Election Result 2024: கன்னியாகுமரி தொகுதியில் வாகை சூடப் போவது…!

தமிழ்நாட்டில் இருக்கும்  மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி (Kanniyakumari Lok Sabha constituency) பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளாலாம். 

நாளை இந்தியா கூட்டணி வெற்றியை கொண்டாட உள்ளோம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை நாளை இந்தியா கூட்டணி வெற்றியை கொண்டாட உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்தியா கூட்டணி தலைவர்கள் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியதைக் குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்  மு க ஸ்டாலின், … Read more

Venom 3: ஆரம்பிக்கலாமா! அந்த குதிரை சீன் ஒண்ணு போதும்.. ’வெனம் 3’ டிரெய்லர் வேறலெவலில் மிரட்டுது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: டாம் ஹார்டி நடிப்பில் தாறுமாறாக உருவாகியுள்ள வெனம் 3 (Venom – The Last Dance) திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்பைடர்மேன் 3 படத்தில் பிளாக் ஸ்பைடர் என வெனம் கேரக்டர் இடம்பெறும். அதை வைத்து டாம் ஹார்டி தனியாக வெனம் படத்தில் நடித்தார். அதன் 3ம் பாகம் தற்போது வெளியாக காத்திருக்கிறது.

இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு

புதுடெல்லி, மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு நடத்திய அனைத்து நிறுவனங்களும் கணித்துள்ளன. இதனால் பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அதேவேளையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் கருத்துக் கணிப்பு முற்றிலும் நேர் எதிராக தேர்தல் முடிவுகள் இருக்கும். நாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் … Read more

டி20 உலகக்கோப்பை; தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு…இலங்கை 77 ரன்களில் ஆல் அவுட்

நியூயார்க், 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் இன்று நடைபெற்று வரும் 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் … Read more

இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை: மாலத்தீவு முடிவு

மாலே, சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற நாடான மாலத்தீவில் இஸ்ரேலியர்கள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசாவில் நடக்கும் போரால் இஸ்ரேலின் மீது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாலத்தீவின் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக காட்ட வேண்டும் என மாலத்தீவு எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் அதிபர் முகமது முயிசுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாலத்தீவு உள்துறை மந்திரி அலி இஹுசன்,”இஸ்ரேலிய பாஸ்போர்ட் … Read more

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமா? எப்படி?

நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதது. நாம் சிரிக்கும்போது அந்த ஆக்சிஜன் போதுமான அளவு உடலுக்கும் செல்கிறது. இதனால் உடலில் பல நன்மைகள் உண்டாகிறது. மகிழ்ச்சியை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருவது சிரிப்பு… Source link

ஆக்கிரமிப்பு வணிகத்தை தடுக்க பழநி கிரிவலப்பாதையில் கடைகளுக்கு முன் தடுப்பு வேலி

பழநி: உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, பழநி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் கடைகளை மறைத்து சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் சுவருக்கு பதிலாக தற்போது தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2.5 கி.மீ. தூரம் கிரிவலப்பாதை உள்ளது. பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கிரிவலப்பாதையை இனிமேல் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது. தனியார் வாகனங்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. … Read more

“தமிழக வளர்ச்சிக்காக உழைத்தவர்!” – கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் பலரும் அவருடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கருணாநிதியின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பொது வாழ்வில் … Read more