“யாருக்கும் அஞ்சாதீர்கள்” – அரசு அதிகாரிகளுக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: நாளை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: எதிர்கட்சி தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். யாருக்கும் அஞ்சாதீர்கள். அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான எந்தவொரு வழிமுறைக்கும் தலைவணங்க வேண்டாம். வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் பயப்படாதீர்கள். தகுதியின் அடிப்படையில் … Read more

Virudhunagar Lok Sabha Election Result 2024: விருதுநகரை விருதாக பெறப்போகும் வேட்பாளர் யார்?

Virudhunagar Tamil Nadu Lok Sabha Election Result 2024: விருதுநகர் மக்களவைத் தொகுதி தனிச்சிறப்பு வாய்ந்த தொகுதி. பல தொழில்கள் செழிக்கும் தொகுதியாக இது உள்ளது. 1977 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார். 

திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உபி மாநிலம் லக்னோவில் உள்ள காசிபூர் பகுதி இந்திரா நகர் 20 வது செக்டரில் பூட்டி இருந்த ஒரு வீட்டிற்குள் சனிக்கிழமை இரவு புகுந்த திருடன் அங்கிருந்த பொருட்களை வாரிச் சுருட்டி மூட்டையாக கட்டினான். பின்னர் அங்கிருந்த ஏசியை போட்டு ஏசி காற்றில் சுகமாக தூங்கியுள்ளான். விடிந்தது கூட தெரியாமல் திருடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் … Read more

காதல் தோல்விக்கு இளையராஜாதான்.. மிஷ்கின் எமோஷனல் பேச்சு.. மனுஷன் உருகுறாரே

சென்னை: இளையராஜா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னும் பல காலத்துக்கு அழியாது. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது உள்ள இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக அவரது இசையில் விடுதலை 2 வரவிருக்கிறது. மேலும் அவரது வாழ்க்கை வரலாறும் படமாகிறது. சூழல் இப்படி இருக்க கடந்த சில மாதமாகவே இளையராஜா மீது ஒருதரப்பினர் கடுமையான

பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கூறிய என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை

நாக்பூர், நாக்பூரில் உள்ள இந்திய ராணுவத்தின் பிரம்மோஸ் ஏவுகணை மையத்தில் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் என்ஜினீயராக பணியாற்றிவர் நிஷாந்த் அகர்வால். இவர் 2018-ம் ஆண்டு ராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். நிஷாந்த் அகர்வால் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் பெண்கள் போல முகநூல் மூலமாக இளம் என்ஜினீயரான நிஷாந்த் அகர்வாலிடம் ராணுவ ரகசியங்களை … Read more

ஆழ்கடல் அதிசயம்… பெண் விஞ்ஞானியை மர்ம இடத்திற்கு அழைத்து சென்ற ஆக்டோபஸ்: வீடியோ வைரல்

நியூயார்க், சமூக ஊடகங்களில் ஆச்சரியம் அளிக்கும் பல்வேறு விசயங்கள் பகிரப்படுவதுண்டு. செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என நாம் அறிந்திராத பல வினோத தகவல்களை கொண்டிருக்கும். அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆழ்கடலில் பல அதிசய உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவற்றை பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறைகள், வசிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் கடலுக்குள் செல்வதுண்டு. அப்படி பெண் விஞ்ஞானி ஒருவர் கடலின் ஆழத்தில் சென்றபோது, ஆச்சரியம் தரும் விசயம் ஒன்று … Read more

நாட்டின் பல பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை…  

• மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை… இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.   2024 ஜூன் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூன் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.   நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் … Read more

`தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால்..!' – ஜனாதிபதி, தேர்தல் ஆணையர், CJI-க்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் ஜூன் 1-ம் தேதியோடு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏழு பேர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு இன்று அவசர கடிதம் எழுதியிருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் 2024 சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரந்தானம், பி.ஆர்.சிவகுமார், சி.டி.செல்வம், … Read more

இதயத்தில் ஆஞ்சியோ..! ஸ்டன்ட் சிகிச்சை எல்லாம் பித்தலாட்டம்! பணம் பிடுங்கும் டெக்னிக்! பிரபல டாக்டர் வெளியிட்ட பகீர்!

இதயத்தில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை அப்படியே விட்டு விடுவது இதயத்தின் ஆயுளை நீட்டிக்கும் என்று பிரபல மருத்துவர் கூறியுள்ளார். Source link

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது, நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் 3 பேர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு சென்ற ரூ.4 கோடியை பறக்கும்படை அதிகாரிகள் தாம்பரம் ரயில் … Read more