வங்கி வாடிக்கையாளர்களின் குறை தீர்க்க உதவும் ‘பேங்க் கிளினிக்’ அறிமுகம்

சென்னை: வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சேவை குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ‘பேங்க் கிளினிக்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 பொதுத் துறை மற்றும் 20 தனியார் வங்கிகளுக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் கிளைகள் உள்ளன. நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இன்றைக்கு வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். ரூ.2.07 லட்சம் கோடி வைப்புத் தொகை வங்கிகளில் உள்ளது. … Read more

மே.வங்கத்தில் 2 பூத்களில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்தின் பராசத், மதுராபூர் தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று (ஜூன் 3) காலை தொடங்கி மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் … Read more

இன்ஸ்டாகிராமில் ‘லிமிட் இன்டரேக்‌ஷன்ஸ்’ அம்சம் அறிமுகம்: இதன் பயன் என்ன?

சென்னை: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ‘லிமிட் இன்டரேக்‌ஷன்ஸ்’ ( Limit Interactions ) என்ற புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது இன்ஸ்டா பயனர்களுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதை பார்ப்போம். மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது பேஸ்புக்) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியனுக்கும் மேலான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் … Read more

NDA vs INDIA: பிரதமரை தீர்மானிக்கும் 'இந்த 6 மாநிலங்கள்' – நாளைக்கு இதுதான் ரொம்ப முக்கியம்

Lok Sabha Election 2024 Majority: 2024 மக்களவை தேர்தலில் மெஜாரிட்டியை பெற வேண்டும் என்றால் இந்த 6 மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றியே ஆக வேண்டும். இந்த தேர்தல் கணக்கு என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

பிக் பாஸ் 8 அப்டேட்.. இந்த தேதியில் துவங்கப் போகிறது.. போட்டியார்கள் விவரம் இதோ

Bigg Boss 8 Tamil: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஹிட்டான நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் தமிழ் 8 துவங்கப்போகும் செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.

நூற்றாண்டு நிறைவு: நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி! முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் – வீடியோ

சென்னை: தமிழ்நாட்டின்முன்னாள் முதலமைச்சர்  மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு இன்று கொண்டாடப்படுகிறது.  இதையடுத்து, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், தலைவரே! பாதை அமைத்தீர்கள்; பயணத்தைத் தொடர்கிறோம்!. நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  தலைவர்களுக்கெல்லாம் தலைவர்.. முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்.. கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர். நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி. நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி. ஒரு ரூபத்தில் வாழ்ந்த … Read more

அடுத்த சர்ச்சை.. மொத்தமாக தடை விதிக்கும் மாலத்தீவு.. கொந்தளிக்கும் இஸ்ரேல்.. என்ன காரணம்! பரபர தகவல்

மாலே: இஸ்ரேல் நாட்டவர்களை மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடான மாலத்தீவு.. இந்த நாட்டின் அதிபராக முய்சு கடந்தாண்டு பதவியேற்ற நிலையில், அப்போது முதலே அவரது அரசு பல சர்ச்சை முடிவுகளை Source Link

பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் தமன்னாவின் காதலர்.. பயில்வான் போட்ட குண்டு!

சென்னை: நடிகை தமன்னா பாட்டியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவி வரும் நிலையில், சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், தமன்னாவின் காதலர் வேறு ஒரு நடிகையுடன் உறவில் இருப்பதாக குண்டை தூக்கிப்போட்டுள்ளார். நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று

40,000 புக்கிங்.., 19,393 Swift கார்களை விநியோகம் செய்த மாருதி

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி இந்தியா வெளியிட்ட நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அறிமுகத்தை தொடர்ந்து 40,000 முன்பதிவுகளை முதல் மாதத்தில் பெற்றுள்ள நிலையில், 19,393 கார்களை நாடு முழுவதும் விநியோகம் செய்துள்ளது. குறிப்பாக மாருதியின் மே 2024 மாதந்திர விற்பனை எண்ணிக்கை 1,74,551 ஆக பதிவு செய்திருந்தாலும், முந்தைய ஆண்டு இதே மாதம் 1,78,083 ஆக இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பீடுகையில் 2 % வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதே மாதம் 26,477 யூனிட்களாக … Read more

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தேவையான நிதியை உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

• முழுமையாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரச செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை.   • பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள அனைவருக்கும் உணவு மற்றும் சுகாதார வசதிகளை தொடர்ந்து வழங்க ஏற்பாடு.   • அவசரகால சூழ்நிலைகளை அறிவிப்பதற்கும் நிவாரணம் பெற்றுக் கொள்வதற்கும் 117 அவசர அழைப்பு இலக்கம் 24 மணி நேரமும்.   • வெள்ளம் அல்லது அனர்த்தங்களினால் சேதமடைந்த இடங்களைப் பார்வையிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை.   • வெள்ளம் அல்லது நீர் தேங்கியுள்ள பகுதிகளில் … Read more