Doctor Vikatan: தினம் 60 கி.மீ டூவீலர் பயணம், தாம்பத்திய உறவின்போது முதுகுவலி… தீர்வு என்ன?

Doctor Vikatan: என்னுடைய வயது 42. என் மனைவியின் வயது 36. நான்  தனியார் நிறுவனம் ஒன்றில் HR ஆக பணிபுரிகிறேன்.  நான் பணி நிமித்தமாக நாள்தோறும் 50 -60 கிலோமீட்டர் தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்கிறேன். வாரம் ஒரு நாள் தாம்பத்திய உறவின்போது கடுமையான முதுகு வலி ஏற்படுகிறது. டூவீலர் ஓட்டுவதுதான் இந்த வலிக்குக் காரணமா, வேறு ஏதேனும் பிரச்னையா? இதற்குத் தீர்வு கூறுங்கள். -Ramesh, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது … Read more

நாடு முழுவதும் நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் 15 கம்பெனி துணை ராணுவம், 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

சென்னை: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணி முதல், மின்னணுஇயந்திரங்களின் … Read more

மத்திய பிரதேசத்தில் டிராக்டர் – ட்ராலி கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஞாயிறு இரவு டிராக்டர் – ட்ராலி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ராஜஸ்தானின் மோதிபுரா கிராமத்தில் இருந்து மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டம் குலாம்பூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்களாவர். விபத்து நடந்த உடனேயே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து ராஜ்கர் ஆட்சியர் ஹர்ஷ் தீக்‌ஷித் … Read more

திணறிய வெஸ்ட் இண்டீஸ்… கெத்து காட்டிய 'கத்துக்குட்டி' – இன்றைய போட்டிகள் யார் யாருக்கு?

ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 2) தொடங்கியது. இருப்பினும், அந்த போட்டி அமெரிக்காவின் டல்லஸ் நகரில் ஜூன் 1ஆம் தேதி அன்று இரவே நடந்தது. குரூப் ஏ-வில் இடம்பெற்ற அமெரிக்கா – கனடா மோதிய அந்த போட்டி இந்தியாவில் நேற்று காலை 6 மணியளவில் நேரலையாக ஒளிப்பரப்பட்டது. இந்த போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கனடாவை வீழ்த்தியது. தொடர்ந்து … Read more

இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் பணிகள் தொடக்கம்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பணிகள் தொடங்குகின்றன. கடந்த மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.  இந்த நடைமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 2ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. நீதிமன்றத்துக்கு கோடை … Read more

Garudan day 3 collection: தரமான சம்பவம் செய்த கருடன்.. 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

 சென்னை: நடிகர் சூரி இரண்டாம் முறையாக ஹீரோவாக நடித்துள்ள கருடன் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சூரிக்கு குவிந்து வரும் பாராட்டால் அவர் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது கருடன் படத்தின் மூன்றாம் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம். இயக்குனர் துரை செந்தில் இயக்கி உள்ள கருடன் படத்தில், நடிகர்

120hp பவரை வழங்கும் Altroz Racer பிரவுச்சர் விபரம் கசிந்தது

டாடா மோட்டார்சின் முதல் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலான அல்ட்ரோஸ் ரேசர் ( Tata Altroz Racer) காரின் முழுமையான நுட்பவிபரங்கள், வேரியண்ட் வாரியான வசதிகள் மற்றும் நிறங்கள் என அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய பிரவுச்சர் இணையத்தில் அறிமுகத்துக்கு முன்னதாகவே கசிந்துள்ளது. இந்தியாவில் கிடைக்கின்ற ஐ20 என்-லைன் மாடலுக்கு சவால் விடுக்கின்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக மாடலான அல்ட்ரோஸ் ரேசர் காரில் நெக்ஸான் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் … Read more

`நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது…' – சொல்கிறார் ஓ.பி.எஸ்

“அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு அணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது…” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடைபெற்றுள்ளது. பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதற்கு நல்ல … Read more

34 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

சென்னை: தமிழகத்தில் உள்ள 34 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் ஏப்ரல், செப்டம்பர் என ஆண்டுக்கு 2 முறை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 34 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதால், கட்டண உயர்வு தள்ளிவைக்கப்பட்டது. பாஸ்டேக் முறை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதால் கட்டண உயர்வுஅமலாகவில்லை என்றும் … Read more

வட மாநிலங்களில் வெப்ப அலை; உ.பி.யில் 33 தேர்தல் பணியாளர்கள் உயிரிழப்பு: ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 பேர் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதில், ஊர்க் காவல் படையினர், துப்புரவு பணியாளர்களும் அடங்குவர் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார். வாக்காளர் உயிரிழப்பு: பலியா மக்களவை தொகுதியின் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ளஒரு வாக்குச்சாவடியில் ஓட்டளிப்பதற்காக வரிசையில் நின்ற ராம்பதன் சவுகான் என்பவர் … Read more