தேர்தல் கருத்து கணிப்பு என்பது கருத்துத் திணிப்பு : முன்னாள் அமைச்சர் 

திண்டுக்கல் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் கருத்து கணிப்பு என்பது கருத்துத் திணிப்பு எனக் கூறி உள்ளார்.   நேற்று திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நத்தம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் “நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் கூட்டணி கட்சி வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். கட்சி தொண்டர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் … Read more

காதலருடன் ப்ரியா பவானி சங்கர் சென்ற ஜாலி ட்ரிப்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். கடைசியாக அவர் ரத்னம் படத்தில் நடித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அடுத்ததாக அவரது நடிப்பில் ஜீப்ரா, டிமாண்ட்டி காலனி 2, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் தனது காதலர் ராஜவேலுவுடன் சிட்னிக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்

கிரெட்டாவுக்கு தொடர்ந்து அமோக வரவேற்பினை பெறும் ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடலாக விளங்குகின்ற கிரெட்டா எஸ்யூவி தொடர்ந்து மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற மாதம் தோறும் 14,000க்கு கூடுதலான விற்பனை எண்ணிக்கை சராசரியாக பதிவு செய்து வருகின்றது. கடந்த மே 2024ல் 14,662 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. மே மாத விற்பனையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 1.13% வளர்ச்சியை முந்தைய ஆண்டு மே மாதத்துடன் (48,601 யூனிட்டுகள்) ஒப்பீடுகையில் பெற்றிருக்கின்றது. கடந்த 2024 மே மாதம் மொத்தமாக 49,151 … Read more

9 மாவட்டங்களில் 5-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதனால் இப்பகுதியில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செ.மீ., கடலூர் மாவட்டம் தொழுதூரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. … Read more

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ‘சட்டா பஜாரில்' ரூ.6 லட்சம் கோடிக்கு பந்தயம்

புதுடெல்லி: ராஜஸ்தானின் பலோடி நகரில் கடந்த 1952-ம் ஆண்டில் ‘சட்டா பஜார்’ என்ற சூதாட்ட அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் சூதாட்ட அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலின் போது’சட்டா பஜார்’ சூதாட்ட அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை நடத்துகின்றன. இதன்படி தற்போதைய மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானின் பலோடி, மகாராஷ்டிராவின் மும்பை, குஜராத்தின் பாலன்பூர், சூரத், கர்னால், மேற்குவங்கத்தின் கொல்கத்தா, மத்திய பிரதேசத்தின் இந்தூர், கர்நாடகாவின் பெலகாவிஉள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த ‘சட்டா … Read more

ஹதராபாத் இனி தெலுங்கானாவுக்கு தான்… தெலுங்கானா, ஆந்திரா இருமாநிலங்களின் பொதுத் தலைநகராக தொடராது…

தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் பொதுத் தலைநகராக இயங்கி வந்த ஹைதராபாத் இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக விளங்கும். 2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது 10 ஆண்டுகள் ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் தலைநகராக செயல்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 இன் படி பொதுத் தலைநகராக செயல்பட்டு வந்த ஹைதராபாத் இன்று முதல் பொது தலைநகராக செயல்படுவது நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநில பிரிவினையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 10 ஆண்டுகளில் ஆந்திராவுக்கு … Read more

அட செம க்யூட்.. ஆதி, நிக்கி கல்ராணி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்!

சென்னை: கோலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட பொதுமக்கள் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தமிழ் தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆதி. இவர் தமிழில் அறிமுகமான மிருகம்

ரோஸ்டன் சேஸ் அதிரடி: பப்புவா நியூ கினியாவை வீழ்த்திய வெஸ்ட்இண்டீஸ் அணி

கயானா, 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும். 2-வது நாளான நேற்று கயானாவில் நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் … Read more

புகார்கள் எதிரொலி: மெரினாவில் வாகன பார்க்கிங் கட்டண வசூல் நிறுத்தம்

சென்னை: மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தத்துக்கு அதிக கட்டண வசூல் மற்றும் கட்டணம் வசூல் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் நிறைவு புகார் எதிரொலியாக அங்கு வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைத்துள்ளது. அங்கு நிறுத்தப்படும் வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க ஒப்பந்த அடிப்படையில் டூர்க் … Read more