புனே கார் விபத்து: ரத்த மாதிரியை மாற்றிய புகாரில் சிறுவனின் தாய் கைது

மும்பை: புனேவில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரைத் தேடிவந்த நிலையில் மும்பையில் இருந்து நள்ளிரவு வீடு திரும்பிய அவரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக ரத்தப் பரிசோதனைக்கு சிறுவனின் ரத்த மாதிரிக்குப் பதிலாக தனது ரத்த மாதிரியை ஷிவானி கொடுத்திருந்தது அம்பலமானது. இதன் பேரில் ஷிவானி மீது போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் அவர் கைது … Read more

கோவையில் அண்ணாமலை தோல்வி… கருத்துக்கணிப்பு முடிவு…

கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைவார் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. 7ம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று மாலை முடிவடைந்த சில நிமிடங்களில் 2024 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது. பாஜக கூட்டணி 330 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஒரே மாதிரியான முடிவை வெளியிட்டுள்ளது. வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறியவர்களில் வெகுசிலரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற … Read more

ஜெயிச்சிட்டீங்க அப்பா.. அம்மா படம் பார்க்கவில்லை.. இருந்தாலும் மகிழ்ச்சி.. ராமராஜன் மகள் ஓபன் டாக்

சென்னை: ராமராஜன் ஒருகாலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். ஆனால் நளினியும், ராமராஜனும் விவாகரத்து செய்து பிரிந்தனர். சூழல் இப்படி இருக்க ராமராஜன் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில் ராமராஜனின்

சுனில் கவாஸ்கரை சந்தித்த பாபர் அசாம் – வீடியோவை பகிர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

நியூயார்க், 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணியும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, … Read more

டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

டெல் அவிவ், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதோடு வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழித்து, பணய கைதிகளை மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் கடந்த … Read more

“காவிரி பிரச்சினையை அரசியலாக்குவது சரியல்ல” – பிரகாஷ்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ராஜிவ் காந்தி அறக்கட்டளை சார்பில் நேற்று (ஜூன் 02) ஜவஹர்லால் நேருவின் 60-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேருவின் தேசியக் கொள்கைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாட்டின் முதல் பிரதமரை பற்றி பேசுகிறோம். ஆனால் நான்தான் கடைசி பிரதமர், ஆயிரம் வருடம் இருப்பேன் என்று ஒருவர் தேர்தல் முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றார். ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளைப் பேசவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. … Read more

தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கும்: கருத்துக் கணிப்புகளில் தகவல்

அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக-ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று மாலை வெளியானது. இதில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே, சிஎன்என், ஏபிசி நியூஸ், நியூஸ் எக்ஸ், இண்டியா டிவி, ஜி நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் … Read more

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா வெற்றி : பாஜக படு தோல்வி

காங்டாக் சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி பெற்ற நிலையில் பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, … Read more

படவாய்ப்பே இல்ல.. விவகாரமான படத்தில் நடித்த சீரியல் நடிகர்.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல தொலைக்காட்சியில் டாப் சீரியலில் லீட் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஒருவர், சினிமாவிற்கு வந்த புதிதில் வாய்ப்பு கிடைக்காததால், விவகாரமான படத்தில் நடித்து இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக திட்டி தீர்த்து வருகின்றனர். பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியல் இல்லத்தரசிகள் ரசித்துப் பார்க்கும் சீரியல்

தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் என சட்ட விதி உள்ளது – 'இந்தியா' கூட்டணி

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் ‘இந்தியா’ கூட்டணி நிர்வாகிகள் இன்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளை முதலில் எண்ணி அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே மின்னணு … Read more