வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு – பப்புவா நியூ கினியா 136 ரன்கள் சேர்ப்பு

கயானா, 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போட்டி தொடரில் 2-வது நாளான இன்று வெஸ்ட்இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 2-வது லீக் ஆட்டத்தில் … Read more

இலங்கையில் இடி மின்னலுடன் கனமழை- 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சீரற்ற கால நிலையுடன் கூடிய பலத்த காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கொழும்பு உட்பட 7 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி … Read more

“நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது” – ஓபிஎஸ் நம்பிக்கை

மதுரை: எனது வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில் தான் உள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று (ஜூன் 02) மாலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “இந்த நாடாளுமன்ற தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடந்துள்ளது. பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக … Read more

இறுதி கட்ட மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளில் 58.3% வாக்குகள் பதிவு

புதுடெல்லி: ஏழாவது மற்றும் இறுதிக் கட்டமாக 57 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 58.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரை 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு … Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தற்போது தென் தமிழக பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.. தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது, நீலகிரி, கோவை, … Read more

இந்தியன் 2வுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்காதது ஏன்?.. அந்த பிரபலம் தான் காரணமா?.. இப்படி பண்ணிட்டாரே!

சென்னை: இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆனால், ரசிகர்கள் பலரும் இந்தியன் 2 பாடல்களை கொண்டாடுவதற்கு பதிலாக இந்தியன் படத்தின் பாடல்களையும் 28 ஆண்டுகளுக்கு முன்னதாக ஏ.ஆர். ரஹ்மான் இசைத்த இசையை இன்ச் இன்ச்சாக ரசித்து அனிருத்தை போட்டு பொளந்து வருகின்றனர்.  இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்ததா நேற்று

டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து 'இந்தியா' கூட்டணி நிர்வாகிகள் மனு

புதுடெல்லி, 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் தேர்தல் அதிகாரிகளை ‘இந்தியா’ கூட்டணி கட்சி நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அப்போது ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ரோகன் போபண்ணா இணை 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை பிரேசிலின் ஆர்லாண்டோ லஸ் – மார்செலோ சோர்மன் இணையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த போபண்ணா இணை 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலின் ஆர்லாண்டோ … Read more

அமெரிக்காவில் ஜோ பைடனை நோக்கி கண்டன முழக்கம் எழுப்பிய பாலஸ்தீன ஆதரவாளர்கள்

வாஷிங்டன், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், தாக்குதல் நீடிக்கிறது. போரை நிறுத்தும்படி பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. எனினும், ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் உறுதியாக உள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முன்னதாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களில் மாணவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். … Read more

வாக்கு எண்ணும் பணிக்கு தயார் நிலையில் கோவை ஜிசிடி வளாகம்: 4 மேற்பார்வையாளர்கள் வருகை 

கோவை: கோவை மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் தயார் நிலையில் உள்ளன. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் பணி நாளை மறுதினம் (ஜூன் 4) நடக்கிறது. கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜிசிடி வளாகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் தொடர்ந்து 24 மணி நேரம் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவிர வளாகம் … Read more