அண்ணி மீது மோகம்: கண்டித்த அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி

பெங்களூரு, கர்நாடகா மாநிலம், சாமராஜநகரில் உள்ள சவுடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத்(45). இவரது சகோதரர் குமார்(39). அண்ணி மீது குமாருக்கு தீராத மோகம் இருந்து வந்துள்ளது. தனது அண்ணன் பிரசாத்தின் மனைவியை குமார் அடிக்கடி தகாத உறவுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்த தனது தம்பி குமாரை, பிரசாத் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது உன் மனைவி இன்னொரு ஆணுடன் … Read more

இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்து சிதறிய இபு எரிமலை

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் உள்ள மவுண்ட் இபு என்ற எரிமலை இன்று மீண்டும் வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து அடர்த்தியான சாம்பல் மற்றும் மணல் வேகமாக வெளியேறுகிறது. இந்த சாம்பல் அப்பகுதியில் சுமார் 7,000 மீட்டர் பரப்பளவுக்கு படர்ந்துள்ளது. சுமார் 6 நிமிடங்கள் வரை எரிமலை வெடித்ததாக இந்தோனேசிய புவியியல் நிறுவன தலைவர் முகமது வாபித் தெரிவித்தார். எரிமலை சீற்றம் தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது. விண்ணை முட்டும் அளவுக்கு ஒரு தூண் போன்று … Read more

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட மகள்; கலங்கி நின்ற நாடோடி குடும்பம் – உதவிய வேலூர் இளைஞர்!

திருச்சி, திருவெறும்பூர் பகுதியிலுள்ள நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் த்ரிஷா – வயது 21. நாடோடி சமூகத்தைச் சேர்ந்த இந்த பெண் ஒருவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2 மாதங்களாக கடுமையான மூச்சுத் திணறல், இருமல் ஏற்படுவதோடு, 5-ல் இருந்து 6 கிலோவுக்கு உடல் எடையும் குறைந்திருக்கிறது. இப்படியொரு நோயால் மகள் த்ரிஷா பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைக்கூட அவரது நாடோடி குடும்பத்தினரால் புரிந்துகொள்ள முடியவில்லை. நோயின் தீவிரம் அதிகமானதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த … Read more

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு 8.10 லட்சம் பார்வையாளர்கள் வருகை

மதுரை: திறப்பு விழா கண்டு ஒரு ஆண்டை நெருங்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை 8 லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோயில் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வந்து செல்லும். தற்போது அதுபோல் மதுரையின் மற்றொரு பெருமையாக மதுரை கலைஞர் நூலகம் திகழ்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு மதுரை நத்தம் சாலையில் ரூ.215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 15-ம் … Read more

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஏற்காதது ஏன்? – 3 காரணம் சொல்லும் எதிர்க்கட்சிகள்

இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக ’350’- க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளன. காங்கிரஸின் ரியாக்‌ஷன் என்ன? – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ இந்தத் தேர்தல் கணிப்புகள் தேர்தலுக்குப் பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு கிடையாது. பிரதமர் மோடியின் ஏஜென்சிகள் எடுத்த கற்பனை … Read more

தமிழக பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிப்பு: சுற்றுலா மாவட்டங்களுக்கு பயணிகள் படையெடுப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது .

'தோனியிடம் டெக்னிக் இல்லை…?' நிதிஷ் ரெட்டி போட்ட குண்டால் சர்ச்சை – முழு விவரம் என்ன?

Nitish Reddy Explanation On Dhoni Controversy: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் மூலம் திறமையான பல கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள் எனலாம். இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் கூட ஐபிஎல் தொடரில் அடையாளம் காணப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர் மெக்கர்க் ஐபிஎல் மூலம் தற்போது பெரும் உச்சத்தை பெற்றுள்ளார், அவர் மீது கவனமும் அதிகமாக உள்ளது.  எனவே, இதுபோன்ற இளம் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு … Read more

டிஸ்ப்ளே இல்லாத லேப்டாப்… கண் முன் விரியும் மாயாஜாலம் – விலை என்ன தெரியுமா?

Sightful Spacetop G1 Laptop: தினந்தினம் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. சமீப ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அதன் உச்சத்தை எட்டி வருகிறது. கல்வித்துறை, மருத்துவத்துறை சார்ந்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பதும் பெரியளவில் வளர்ந்து வருகிறது.  அதுமட்டுமின்றி, Augmented Reality, Virtual Reality சார்ந்த தொழில்நுட்பங்களும் சமீப காலமாக வளர்ந்து வருகிறது.  அந்த வகையில், தற்போது முதல்முறையாக டிஸ்ப்ளே இல்லாத, அதாவது திரையே இல்லாத ஒரு லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த … Read more

 3 கேரள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம் கடும் மழை காரணமாக கேர்லாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கியது. மழை ஆரம்ப தினம் முதலே மாநிலத்தின் பல பகுதிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறது.எனவே அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மழை கொட்டி வருகிறது.  இடுக்கி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. … Read more

சூர்யா 44 படத்தில் சூர்யாவின் லுக் பார்த்தீங்களா?.. ஃபிரெஞ்சு பியர்ட் வச்ச ரோலக்ஸ் மாதிரி இருக்காரே!

சென்னை:  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 44’ படத்தின்  படப்பிடிப்பு இன்று அந்தமானில் ஆரம்பித்தது. அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் துறைமுகத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அந்த படத்தில் சூர்யா எந்த மாறியான தோற்றத்தில் வரப் போகிறார் என்கிற ஃபர்ஸ்ட் ஷார்ட் வீடியோவை தற்போது கார்த்திக்