சென்னை மாவட்ட தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அரசு சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கான பொது … Read more

தேர்தல் முறைகேட்டை நியாயப்படுத்தும் முயற்சியே ‘எக்ஸிட் போல்ஸ்’: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவை தேர்தல் முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், “அரசாங்கத்தின் அடுத்த 100 நாட்களுக்கான வேலைத் திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்துவதற்கு காரணம் இருக்கிறது. இவை அனைத்தும், நான் திரும்பி வருகிறேன், நான் மீண்டும் பிரதமராகப் போகிறேன் எனக்கூறும் ஒரு வகையான உளவியல் … Read more

துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய கருணாஸ்: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் திரைப்பட நடிகரான, முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் கைப்பையில் இருந்து, 40 துப்பாக்கி குண்டுகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவருடைய விமான பயணத்தை ரத்து செய்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை.

கருடன் விமர்சனம்: டெம்ப்ளேட் ஆக்ஷன் கதையில் கொஞ்சம் புது ரூட்டு; மிரட்டும் சூரி – சசிகுமார் காம்போ!

தேனி மாவட்டம் கோம்பை கிராமத்தில் தன் மனைவி (ஷிவதா) மற்றும் பிள்ளைகளுடன் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்திவருகிறார் ஆதி (சசிகுமார்). அவரும் அதே கிராமத்தில் செங்கல் சூளை நடத்திவரும் கர்ணாவும் (உன்னி முகுந்தன்) உயிர் தோழர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, உறவுகள் இல்லாமல் கோயிலில் கிடந்த சிறுவன் சொக்கனை (சூரி), தன் வீட்டிற்கு அழைத்து வந்து, தன்னுடனே வைத்துக்கொள்கிறார் சிறுவனான கர்ணா. சொக்கன் வளர்ந்து, கர்ணாவிற்காக எதையும் செய்யும் விசுவாசி ஆகிறான். ஆதியும் அவரது குடும்பமும் சொக்கனை தன் … Read more

4 ஆம் தேதி இந்தியாவை சூழ்ந்த இருள் அகலும் : திருமாவளவன்

சென்னை வரும் 4 ஆம் தேதி இந்தியாவை சூழ்ந்த இருள் அகலும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., சென்னை ராஜா மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வரலாற்று புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். பிறகு அவர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருமாவளவன் “இது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு என்று சொல்வதை விட தமிழர்களின் வரலாறு என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். கருணாநிதி ஒரு போராளியாக பிறந்து, போராளியாக வாழ்ந்து, … Read more

தேசிய கட்சிகளை கதற விட்ட சிக்கிம்..! படுதோல்வி பாஜக.. காங்கிரஸால் நோட்டாவை கூட ஜெயிக்க முடியலையே!

கங்டக்: மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடைபெற்ற நிலையில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில் சிக்கிமில் பாஜகவும் காங்கிரசும் பலத்த அடி வாங்கி இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸின் நிலைமை தான் படுமோசமாக இருக்கிறது. இந்தியாவின் 18 வது மக்களவைக்கு 543 மக்களவை உறுப்பினர்களை Source Link

Director Shankar: இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் இல்லை.. உண்மையை வெளிப்படுத்திய ஷங்கர்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இருவேறு பாகங்களாக ஆறு மாத இடைவெளிகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என்று ரிலீசாகவுள்ள சூழலில் இந்த

Assembly Elections 2024: அருணாச்சலில் பாஜக… சிக்கிமில் SKM – ஆட்சியைத் தக்கவைக்கும் ஆளுங்கட்சிகள்!

வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில், இந்த மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. இதில் அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதியில் 10 தொகுதியில் பா.ஜ.க ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்றதால், மீதமுள்ள 50 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இரு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. பாஜக அருணாச்சலப் பிரதேசம் அருணாச்சலப் பிரதேசத்தில் ஆரம்பத்திலிருந்தே பா.ஜ.க முன்னிலை வகித்து வந்தது. இந்த … Read more

மதுரை விமான நிலைய வாகன கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு – வாகன ஓட்டிகள்-ஊழியர்கள் இடையே வாக்குவாதம்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் வாகன கட்டணம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரை விமான நிலையத்துக்கு தினமும் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்காக நூற்றுக்கணக்கான தனியார், சொந்த வாகனங்கள் வந்து செல்கின்றன. விமான நிலையம் வரும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவன ஒப்பந்த காலம் சமீபத்தில் முடிவடைந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, புதிதாக ஜூன் 1ம் தேதி முதல் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விமான நிலையம் வரும் வாகனங்களுக்கு … Read more