நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

புதுடெல்லி, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த சமயத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், வருகிற திங்கள்கிழமை (ஜூன் 3) அதிகாலை 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் … Read more

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு

சென்னை, தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இன்றளவும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோன்று கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான தினேஷ் கார்த்திக் கடைசியாக நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியுடன் ஐ.பி.எல் … Read more

'தைவான் பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம்' – சீன ராணுவம்

பீஜிங், தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, அவ்வப்போது தைவானை சுற்றி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவிடம் இருந்து தைவானை ஒருபோதும் சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து … Read more

ரூ.5,000 வரை மாருதியின் ஏஎம்டி (Auto Gear Shift) கியர்பாக்ஸ் மாடல்கள் விலை குறைப்பு

மாருதி சுசூகி நிறுவனத்தால் Auto Gear Shift என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற ஆல்டோ கே10, செலிரியோ, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர் பலேனோ, இக்னிஸ், மற்றும் ஃபிரான்க்ஸ் மாடல்களின் விலை ரூ.5,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு ஜூன் 1,2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்க ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுக்கு மாற்றாக விலை குறைப்பை மையமாக கொண்டு கிளட்ச் உதவியில்லாமல் மேனுவலாக கியர்களை மாற்றுவதற்கு ஏதுவாக ஆட்டோமேட்டிக் … Read more

Video Conference-ல் கூடிய திமுக மாவட்டச் செயலாளர்கள்… கூட்டத்தில் நடந்தது என்ன?

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி, ஜூன் 1-ம் தேதி காலை 11 மணிக்குக் காணொளி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இந்தக் கூட்டத்தில் முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு, … Read more

12 வயது சிறுவனை கடித்து குதறிய 2 வளர்ப்பு நாய்கள்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை @ சென்னை

சென்னை: தெருவில் நடந்து சென்ற 12 வயது சிறுவனை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை புழல் லட்சுமிபுரம் டீச்சர் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் ஜோசுவா டேனியல். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கிளியோபஸ் ஜெரால்டு (12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர், ராட்வைலர், பாக்ஸர் என்ற 2 நாய்களை வளர்த்து … Read more

தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கையில் 100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்தது காங்கிரஸ்

மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜித்தேந்திர பட்வாரி, இம்முறை மக்களவை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் இரட்டை இலக்க எண்ணில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 27 இடங்களில் குறைந்தது 10 இடங்களை வெல்லும் என்றே அவர் சொல்ல வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டாலும் இம்முறை வாகை சூடும் என்று அக்கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர். … Read more

அஞ்சாமை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

கதையைக் கேட்கும்போதே நான் அழுக ஆரம்பித்துவிட்டேன். அட்டகாசமான கதை. படத்தில் மம்மூட்டி நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அது நடக்க முடியாமல் போனது என ‘அஞ்சாமை’ படம் குறித்து நடிகர் விதார்த் தெரிவித்துள்ளார்.

Exit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்… டிகேஎஸ் இளங்கோவன் சொன்னது என்ன?

Exit Poll DMK Reaction: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

2வது இடத்தில் தமிழ்நாடு: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்!

டெல்லி:  மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை விதிகளை மீறி எடுத்துச்சென்றதாக  ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதன்படி முதலிடத்தில் டெல்லியும், 2வது இடத்தில்  தமிழ்நாடும்  இடம்பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதுவரை 6 கட்டத் … Read more