குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி பெறுமா..? ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் இரண்டாவது மாடலாக வெளியிடப்பட்டுள்ள ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது குடும்பம் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஏதெர் முதல்முறையாக வெளியிடப்பட்ட 450 சீரியஸ் ஆனது நிறுவனத்திற்கு மிக சிறப்பான பெயரை பெற்று மேலும் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தும் மாடல் என்ற பெயரை பெற்று இருக்கின்றது. குறிப்பாக 450X மாடல் ஆனது சிறப்பான ரைடிங் அனுபவம் மற்றும் மிக விரைவான ஆசிலரேஷன், ஸ்போர்ட்டிவ் சவாரிக்கு ஏற்றதாகவும், பேட்டரியின் திறன் மிகச் சிறப்பாக இருந்தது. … Read more

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் சிறந்த தீர்வை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க … Read more

Doctor Vikatan: நாள்பட்ட நுரையீரல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்?

Doctor Vikatan: COPD பிரச்சினை உள்ளவர்கள் எந்த மாதிரி உணவுகளைச் சாப்பிட வேண்டும்… எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்… விளக்கமாக கூறவும்.-Nagarajan, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி. நுரையீரல் மருத்துவர் திருப்பதி Doctor Vikatan: லேட்டாக தூங்கச் சென்றாலும் அதிகாலையிலேயே விழிப்பு வருவது ஏன்? ‘க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ்’ (Chronic Obstructive Pulmonary Disease) என்பதன் சுருக்கமே சிஓபிடி (COPD).  அதாவது நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு என்று புரிந்துகொள்ளலாம்.  புகைப்பழக்கம் உள்ளவர்களே இந்தப் … Read more

திமுக ஆட்சியில் அனைத்து துறையினரும் பாதிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாணவர்கள் பற்றிய விவரங்களையும், வருகைப் பதிவேட்டையும் ‘எமீஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறது. மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ‘எமீஸ்’ தளத்தில் பதிவேற்றுவதிலேயே நேரம் செலவாகிறது என்றும், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நேரத்தைவிட, இதற்காக தங்களது செல்போனுடன் இருக்கும் நேரம்அதிகமாகிவிட்டதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதேபோல, காவல் துறையினரை ஆளும் கட்சி நிர்வாகிகள் மிரட்டுவதும், வருவாய்த் துறை ஊழியர்கள் மீது மணல் திருட்டு … Read more

ஜூன் 4-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும்: வாக்களித்த பின்னர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

கோரக்பூர்: மக்களவை இறுதி கட்டத் தேர்தலில் வாக்களித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஜூன் 4-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9,பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, … Read more

ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

கடந்த ஆட்சி காலத்தில் பிரிட்டனில் அடகு வைக்கப்பட்ட ரூ.100 மெட்ரிக் டன் தங்கம் மீட்கப்பட்டு இந்தியா வந்தடைந்தது!

டெல்லி: கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில்,  நிதி நெருக்கடிகளை சமாளிக்க பிரிட்டன் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த  தங்கத்தில், ரூ. 100 மெ.டன் தங்கம் மீட்கப்பட்டு  இந்தியாவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக  ரிசர்வ் வங்கி  வட்டாரங்கள்  தெரிவித்து உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தங்க கையிருப்பில் பாதிக்கும் மேற்பட்டவை, பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆஃப் … Read more

போலீசில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்.. எல்லாமே நடிப்பா கோபால்.. உண்மையான காரணம் இதுதான்!

சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் போலீசிடம் சிக்கி வாக்குவாதம் செய்வது போல நேற்று ஒரு வீடியோ இணையத்தில் வெளியானது. அதில், கார் டிக்கியை திறக்கமாட்டேன் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். அந்த வீடியோ உண்மை இல்லை என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. மதுரையை பூர்வீகமாக கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ், துபாயில் சென்று செட்டில் ஆனார். அவருக்கு

ஜனாதிபதி இளம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

நாட்டின் எதிர்கால பயணத்தில் இளம் தலைமுறையை வலுவான முறையில் ஈடுபடுத்த புதிய பொறிமுறை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இளம் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று (30) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.   ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இளையோரின் பங்கேற்புடனான நிகழ்வுகளின் ஒரு அங்கமாக “இளையோர் கலந்துரையாடல் – நாளை இலங்கையின் இளம் தலைவர்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய பொருளாதார மறுசீரமைப்பு … Read more

தேசபக்தி பாடலுக்கு நடனம்; கையில் மூவர்ணக் கொடி.. மேடையிலேயே மாரடைப்பால் இறந்த முன்னாள் ராணுவ வீரர்!

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தேசபக்தி பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பல்விந்தர் சிங் சாப்ரா. இவருக்குக் கடந்த 2008-ம் ஆண்டு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, இந்தூரின் ஃபுட்டி கோதி பகுதியில் … Read more