துணை முதல்வர் பதவி கேட்டு 3 பேர் போர்க்கொடி: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவையும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. அப்போதே சில மூத்த தலைவர்கள் முதல்வர், துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், ஒக்கலிகா பிரிவை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியதைப் போல, லிங்காயத்து மற்றும் பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோஷம் வலுத்துள்ளது. இந்நிலையில் கர்நாடக உள்துறை … Read more

இந்த 5 ரீசார்ஜ் பிளான்களுக்கு இலவச 5ஜி இனி கிடையாது… என்னென்னு பாருங்க…!

Jio 5G Unlimited Data Plans: 18ஆவது மக்களவை நிறைவடைந்த பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களுக்கான விலைகளை உயர்த்தியிருக்கின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அதன் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிளான்களின் விலையை உயர்த்தி உள்ளன. ஜியோ நிறுவனம் மொத்தம் 12 சதவீதம் அதன் விலையை உயர்த்தியிருக்கிறது. ஜூலை 3ஆம் தேதியில் இருந்து இவை அமலுக்கு வர உள்ளது. ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் பிளான்களில் விலையில் மட்டுமில்லை அதன் அன்லிமிடெட் 5ஜி … Read more

விரைவில் வந்தே பாரத் ரயில்களில் டிக்கட் கட்டணம் குறைக்கப்படும்

பெங்களூரு மத்திய ரயில்வே இணையமைச்சர் சோபண்ணா விரிஐவ்ல் வந்தே பாரத் ரயில் டிக்கட் கட்டணம் குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய ரெயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரி வி.சோமண்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ”வந்தே பாரத் ரெயிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் நேற்று முன்தினம் ஆலோசித்தோம். ரெயில்வே துறையின் … Read more

ஸ்டேட் ரேங்க், டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட்! என் அப்ளிகேஷன் ஏன் ரிஜெக்ட் ஆச்சு விஜய் அண்ணா! மாணவி கண்ணீர்

கள்ளக்குறிச்சி: 10 ஆம் வகுப்பில் மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்தும் மாணவி ஒருவருக்கு விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. நேற்று முன் தினம் இரண்டாவது முறையில் 10, 12 ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள Source Link

Joe Russo: அவெஞ்சர்ஸ் சீரீஸ்ல இந்தியன் ஹீரோன்னா அது ரஜினிகாந்த்தான்.. ஜோ ரூசோ உறுதி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இதேபோல கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. தற்போது ஜெய் பீம் பட இயக்குனர்

சரியான தருணம் இதுவே; கோலியை தொடர்ந்து ஓய்வு முடிவை அறிவித்த ரோகித் சர்மா

பார்படாஸ், டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடந்தது. இதில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி … Read more

T20 World Cup: `கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர்' – இந்திய அணிக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து

இந்தியா ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2011-க்குப் பிறகு உலகக்கோப்பைத் தொடர்களில் இந்தியாவுக்கு எத்தனையோ முக்கியமான தருணங்கள் சாதகமாக கைகூடாமல் போயிருக்கின்றன. ஆனால், இந்த முறை போட்டியே கையைவிட்டு சென்றுவிட்டது எனத் தோன்றிய நிலையிலிருந்து மீண்டு வந்து, இந்தியா சாதனை புரிந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று மிரட்டியிருக்கிறது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறது. Thrilled to … Read more

டாஸ்மாக் மதுவில் ‘கிக்’ இல்லை: அமைச்சர்களின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: ‘டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை’என சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகனுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக தலைவர் அன்புமணி: “தமிழகத்தில் முழு மதுவிலக்கைகொண்டு வருவதற்கான சூழல்இல்லை. தமிழகத்தில் மது விலக்கை நடைமுறைப் படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமியும், “உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் ‘கிக்’ … Read more

ஹரியாணா அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவர்கள்: சிபிஐ விசாரணை தொடக்கம்

சண்டிகர்: கடந்த 2016-ல் ஹரியாணா அரசுப்பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை மூலம் நிதி மோசடி செய்த விவகாரம் குறித்து சிபிஐ நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தை அணுகிய சிபிஐ“விசாரணைக்கு பெரும் மனிதவளம் தேவைப்படும் என்பதால் விசாரணையை மாநில காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கோரியது. ஆனால் இந்த … Read more

ஜூலை 12 வரை கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி ஜூலை 12 வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்ர். அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெஜ்ரிவாலை 3 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் நேற்றோடு அவரது காவல் … Read more