இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம்  5.07% வீதத்தால் குறைக்கப்படும்

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம்  5.07% வீதத்தால் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷசி வெல்கம தெரிவித்தார்.  

இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.  

அதன்படி வருடாந்த பஸ் கட்டண திருத்தத்திற்கு இணங்க  2024.07.01 நள்ளிரவில் இருந்து பயணத்தில் ஈடுபடும் அனைத்து பஸ் சேவைகளினதும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் (02) இலங்கை போக்குவரத்து சபையினால் செலுத்தப்படும் பஸ்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால்/ மாகாண போக்குவரத்து அதிகாரியினால் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து சேவை அனுமதி பத்திரத்தின் கீழ் செலுத்தப்படும் தனியார் பஸ்களில் புதிய பஸ் கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என  தேசியப் போக்குவரத்து அணைக்குழுவின் www.ntc.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பயணிகளிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தீர்மானிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பஸ் கட்டணம் அறவிடப்படுதல் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் பொதுமக்கள் முறைப்பாடுகளை  1955 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு அல்லது, 0712595555 என்ற whatsapp இலக்கத்திற்கு அல்லது  0112595555 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மேற்கொள்ள முடியும். 

இவ் ஊடகக் கலந்துரையாடலில் தேசிய போக்குவரத்து சபையின் கடமைப் பணிப்பாளர் நாயாகம் நயோமி ஜயவர்தன, திட்டமிடல் பணிப்பாளர் கே ஏ சி கருணாரத் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.