இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி நுட்பத்தை கொண்டு வரும் ஹூண்டாய்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ட்வீன் சிலிண்டர் நுட்பத்தை கொண்ட சிஎன்ஜி மாடலை போலவே, இரட்டை சிலிண்டர் கொண்டதாக இயங்கும் நுட்பத்திற்கு ‘Hy-CNG Duo’ என்ற பெயரில் காப்புரிமை பெற்றுள்ளதால் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளிவரக்கூடும்.

ஹூண்டாய் ‘Hy-CNG Duo’

இந்தியாவில் மாருதி சுசூகி, டாடா மற்றும் ஹூண்டாய் என மூன்று நிறுவனங்களும் சிஎன்ஜி எரிபொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், சிஎன்ஜி கார்களில் மிகப்பெரிய குறைபாடாக கருதப்படுவது பின்புறத்தில் சிஎன்ஜி கலனை கொடுப்பதனால் பூட்ஸ்பேஸ் குறைந்து விடுகின்றது.

இதனை கருத்தில் கொண்டே டாடா மோட்டார்ஸ் ஒற்றை சிலிண்டருக்கு பதிலாக இரட்டை சிலிண்டரை அறிமுகப்படுத்தி பூட்ஸ்பேஸ் குறையை நீக்கியது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் மேனுவல் மட்டும் ஏஎம்டி என இரண்டிலும் விற்பனை செய்து வருகின்றது.

இந்த போட்டியை கருத்தில் கொண்டே ஹூண்டாய் நிறுவனம் சிஎன்ஜி வாகனங்களில் இரட்டை சிலிண்டர் நுட்பத்தை கொண்டு வரவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர், ஆரா மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகிய மூன்று மாடல்களிலும் விற்பனை செய்யப்படுவதனால் இந்த இரட்டை சிலிண்டரை பெற்றதாக மூன்று மாடல்களும் வரவுள்ளது.

69PS பவர் மற்றும் 95NM டார்க் வெளிப்படுத்தும் 1.2லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டு சிஎன்ஜி பயன்முறையில் இயங்குகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.