இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் காலமானார்

கொழும்பு,

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டவர் இரா. சம்பந்தன் (வயது 91). இவர் இலங்கை அரசில் எம்.பி.யாக செயல்பட்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை இரா. சம்பந்தன் மேற்கொண்டார்.

இதனிடையே, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இரா. சம்பந்தன் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரா. சம்பந்தன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இரா. சம்பந்தன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.