சென்னை: தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர்.
> அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
> வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
> நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
> சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
> நீர்வளத்துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா செய்தி மற்றும் காகித துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
> பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த சந்திரமோகன், தற்போது சுற்றுலாத்துறை செயலாளராக நியமனம்.
> புதிய பொதுப்பணித் துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
> ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
> நெடுஞ்சாலைத் துறை செயலாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
> தமிழக அரசின் கேபிள் டிவி இயக்குநராக இருந்த ஜான் லூயிஸ், தற்போது தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான இயக்குநராக நியமனம்.
> விஜயலட்சுமி ஐஏஎஸ், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
> வெங்கடாசலாம் ஐஏஎஸ், தமிழக அரசின் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
> ஹரிஹரன் ஐஏஎஸ், நில சீர்த்திருத்த துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
> லில்லி ஐஏஎஸ், போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
> சாய் குமார் ஐஏஎஸ், தமிழக தொழில் முதலீட்டு துறை செயலாளராக நியமனம்.
> வைத்தியநாதன் ஐஏஎஸ், தமிழ்நாடு கேபிள் டிவியின் இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
> ஜவஹர் ஐஏஎஸ், சமூக சீர்த்திருத்த துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.