ஹீரோ தி சென்டினல் சிறப்பு எடிசன் வெளியானது

ஹீரோ நிறுவன தலைவர் பிரிஜ்மோகன் லால் முன்ஜாலின் 101வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தி சென்டினல் (the Centennial) என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் நேரடியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

ஏல முறையில் அதிக தொகைக்கு விண்ணப்பம் செய்யும் 100 நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள மாடல் ஹீரோவின் ஊழியர்கள், கூட்டு நிறுவனங்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மட்டும் விண்ணபிக்க முடியும். ஹீரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான ஏல முறை நடைபெற்று இந்த 100 மாடல்களின் விற்பனை மூலம் திரட்டபடுகின்ற நிதி சமூக நலனுக்காக பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கரீஸ்மா XMR 210 அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 5.5 கிலோ வரை எடை குறைவாக வெறும் 158 கிலோ எடை பெற்றுள்ள தி சென்டினல் எடிசன் பைக்கில் தொடர்ந்து 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

இலகுவான எடை கொண்ட அலுமனியம் பெற்று செமி ஃபேரிங் செய்யப்பட்டு பிரத்தியேகமாக கார்பன் ஃபைபர் பாகங்களை கொண்டுள்ள பைக்கில் எம்ஆர்எஃப் டயர்கள் கூடுதலாக, Akrapovic எக்ஸ்ஹாஸ்ட், அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷனை பெறுகின்றது.

வரும் செப்டம்பர் 2024 முதல் விநியோகம் துவங்க உள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“My Hero, My Story” பிரச்சாரம்

மை ஹீரோ, மை ஸ்டோரி” பிரச்சாரத்தில் வாடிக்கையாளர்களை Hero பிராண்டுடன் தங்கள் அனுபவங்களையும் பயணங்களையும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் ஹீரோ மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை வாங்கினால் சிறப்பு கேஷ்பேக் சலுகை பெற தகுதியானவார்களாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.