Indian2: "புத்தகமும் திரைப்படமும்தான் கமலின் உலகம்…" – கமல் குறித்து மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி!

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `இந்தியன் 2′.

வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தியில் இத்திரைப்படம் `இந்துஸ்தானி 2′ என்ற பெயரில் வெளியாகிறது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் ஊழல் குறித்துப் பேசியிருந்தது. மனிஷா கொய்ராலா கமலிற்கு (சந்துரு கதாபாத்திரம்) ஜோடியாக நடித்திருந்தார்.

கமல், மனிஷா கொயராலா

இரண்டாம் பாகத்தில் மனிஷா கொய்ராலா நடித்திருக்கிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் படப்பிடிப்பின்போது இயக்குநர் ஷங்கரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் ‘இந்தியன்’ இரண்டாம் பாகத்தில் அவர் நடித்திருக்கக் கூடும் என்று கூறி அப்புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கினர்.

இந்நிலையில், தற்போது கமல் ஹாசனைச் சந்தித்துப் பேசியுள்ள மனிஷா கொயராலா, “சிறந்த நடிகரும், அறிவுக் கூர்மை கொண்டவரான கமல் சாருடன் இந்தியன் முதல் பாகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். இருவரும் இந்தியன் முதல் பாகத்தில் ஜோடியாக நடித்திருந்தோம்.

புத்தகமும் திரைப்படமும்தான் கமலின் உலகம். மனதையும், ஆன்மாவைச் சீர்படுத்தும் சிறந்த புத்தகங்களை அவர் எனக்குப் பரிந்துரை செய்தார். எப்போதும் சந்தித்தாலும் நான் அவரைப் பார்த்து வியந்துகொண்டேதான் இருக்கிறேன். நீண்ட நேரம் சினிமா, புத்தகங்கள் பற்றி அவருடன் உரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. இந்த சந்திப்பிற்கு மிகுந்த நன்றிகள் கமல் சார்” என்று பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.