இசிப்பத்தன கல்லூரியின் விளையாட்டு செயற்பாடுகளுக்காக ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டு மைதானத்தை ஒப்படைத்தல்

கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான ஹென்றி பெட்ரிஸ் ( Henry Pedris Ground ) விளையாட்டு மைதானத்தை இசிப்பத்தன கல்லூரிக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டு மைதானத்தை இசிப்பத்தன கல்லூரிக்கு ஒப்படைப்பதன் மூலம் அதனை சரியான வகையில் மேம்படுத்திப் பேணிச் செல்வதுடன், அதன்மூலம் குறித்த கல்லூரி மற்றும் ஏனைய சுற்றியுள்ள பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் மற்றும் அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது விளையாட்டுக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிட்டுகின்றது.

இது தொடர்பாக 01.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

01. இசிப்பத்தன கல்லூரியின் விளையாட்டு செயற்பாடுகளுக்காக ஹென்றி பெட்ரிஸ் ( Henry Pedris Ground ) விளையாட்டு மைதானத்தை ஒப்படைத்தல்

பல்வேறு திறமைகளை வெளிப்படுத்துகின்ற பல விளையாட்டு வீரர்களைக் கொண்டுள்ள இசிப்பத்தன கல்லூரிக்கு விளையாட்டுப் பயிற்சிகளுக்காக நிரந்தர விளையாட்டு மைதானம் இன்மையால், விளையாட்டுக்களில் ஈடுபடுகின்ற விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை விருத்தி செய்வதில் தடைகள் காணப்படுகின்றன. அதனால், கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான ஹென்றி பெட்ரிஸ் ( Henry Pedris Ground ) விளையாட்டு மைதானத்தை இசிப்பத்தன கல்லூரியின் விளையாட்டு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக இருதரப்பினர்களுக்கிடையே ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தத்தின் காலப்பகுதி 2017 ஆம் ஆண்டில் முடிவடைந்துள்ளது. ஹென்றி பெட்ரிஸ் ( Henry Pedris Ground ) விளையாட்டு மைதானத்தை இசிப்பத்தன கல்லூரிக்கு ஒப்படைப்பதன் மூலம் அதனை சரியான வகையில் மேம்படுத்திப் பேணிச் செல்வதுடன், அதன்மூலம் குறித்த கல்லூரி மற்றும் ஏனைய சுற்றியுள்ள பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் மற்றும் அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது விளையாட்டுக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிட்டுகின்றது. அதற்கமைய, ஹென்றி பெட்ரிஸ் (Henry Pedris Ground ) விளையாட்டு மைதானத்தை அப்பெயரிலேயே பேணிக்கொண்டு, குறித்த விளையாட்டு மைதானத்தை இசிப்பத்தன கல்லூரிக்கு ஒப்படைப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.