உழைக்கும் நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொரு அமைச்சிலும் சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், கடின உழைப்பே இதற்கான தீர்வாக அமையும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் பணி புரியக்கூடிய கலாசாரத்தை உருவாக்கும் வகையில், கடினமாக உழைக்க வேண்டும் என்றும், இளைஞர்களுக்கான இளைஞர் சேவை மன்றம் இதற்கான சலுகைகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்
பெண்களை வலுவூட்டும் வகையில் பிரதேச செயலகங்கள் ஊடாக பெண்களுக்கு தனியான நிதி ஒதுக்கப்படும். ஆத்துடன், விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கலின் கீழ் இளைஞர் பண்ணைகளுக்கு இடமளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.