கொழும்பிலிருந்து கண்டி வரை செல்லும் 1019 புகையிரதத்தில் புகையிரத சாரதியின் கவனயீனத்தால் தற்போது அவரின் வேலை தடைசெய்து, திணைக்கள மட்டத்தில் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத சேவை அறிவித்துள்ளது.
இப் புகையிரதத்தின் சாரதி சுதுகும்பொல பிரதேசத்தில் புகையிரதத்தை நிறுத்தி அதிலிருந்து இறங்கியுள்ளார்.
அதன்போது பயணிகள் அவரை கயிறொன்றினால் கட்டி மீண்டும் புகையிரதத்தில் ஏற்றியதன் பின்னர் புகையிரதம் கண்டி நோக்கிச் செல்வதற்குப் புகையிரத உதவி சாரதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகையிரதம் கண்டியை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.