“தமிழகத்தில் தேர்தல் தோல்வியால் பாஜகவினர் துவள வேண்டாம்” – நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல்: “தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைக் கண்டு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் துவண்டுவிட வேண்டாம். அடுத்து வர உள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தலில் மக்களின் மனங்களை கவர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வெற்றி இலக்கை அடைய வேண்டும்” என நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினார்.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம் என யாரும் துவண்டுவிட வேண்டாம். வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜம்தான். நாம் மக்களின் மனதை கவர வேண்டும். அடிப்படை தேவைகளை மக்களுக்காக போராடி பெற்றுத்தர வேண்டும்.



மக்கள் பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றினால் வெற்றி இலக்கை அடையலாம். அடுத்துவர உள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் முனைப்புடன் பணியாற்றி வெற்றி இலக்கை எட்ட வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.