இந்தியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் சூப்பர் ஹீரோக்களுக்கு இணையாக கருதப்படுகிறார்கள். சில ரசிகர்கள் அவர்களை கடவுள் போலவும் வணங்குகின்றனர். கிரிக்கெட்டில் அவர்கள் செய்துள்ள சாதனைகளால் ஈர்க்கப்பட்டு இவ்வாறு ரசிகர்கள் செய்கின்றனர். மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களை ஒப்பிடும் போது இந்தியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். உலகெங்கும் உள்ள மற்ற விளையாட்டு வீரர்களை ஒப்பிடும் போதும் இவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். பிராண்டுகள், ஒப்பந்தங்கள், முதலீடுகள் போன்றவற்றில் இருந்து கோடி கணக்கில் வருமானம் பெறுகின்றனர். இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை காட்டிலும் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளதால் இவர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் உள்ள மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை ஆட்சி செய்யும் அளவிற்கு அதிகார பலமும், பண பலமும் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அதிகமாக பணம் சம்பாதித்தாலும், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடன் ஒப்பிடும் போது சற்று அதிகமாக சம்பாதிக்கின்றனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா போன்றவர்கள் கிரிக்கெட் விளையாடியதன் மூலம் சம்பாதித்ததை தவிர பிராண்ட் ஒப்புதல்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து உள்ளனர். தோனி கிரிக்கெட்டை தாண்டி சினிமாவிலும் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் இவர்கள் அனைவரையும் தாண்டி இந்திய கிரிக்கெட் ஒருவர் அதிக சொத்து வைத்துள்ளார்.
யார் இந்த சமர்ஜித்சிங் கெய்க்வாட்?
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சமர்ஜித்சிங் கெய்க்வாட் இந்தியாவில் உள்ள பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். தற்போது அவரின் சொத்து மதிப்பு 20,000 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது தந்தை ரஞ்சித்சிங் கெய்க்வாட் இறந்த பிறகு, சமர்ஜித்சிங் லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் பரோடாவின் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார். லக்ஷ்மி விலாஸ் அரண்மனை ஒரு பெரிய தனியார் குடியிருப்பு ஆகும். அவரது தந்தை ரஞ்சித்சிங் கெய்க்வாட் பரோடா மற்றும் பனாரஸில் உள்ள 17 பெரிய கோயில்களின் அறக்கட்டளைகளை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். அவரது மகனும் கிரிக்கெட் வீரருமான சமர்ஜித்சிங் கெய்க்வாட் குஜராத்தின் வான்கனேர் மாநிலத்தைச் சேர்ந்த ரதிகராஜே கெய்க்வாட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
குடும்ப பின்னணி என்ன?
சமர்ஜித்சிங் கெய்க்வாட் ஏப்ரல் 1967ல் ரஞ்சித்சிங் கெய்க்வாட் மற்றும் சுபாங்கினிராஜே ஆகியோருக்கு பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. சிறுவயதில் டேராடூனில் உள்ள புகழ்பெற்ற டூன் பள்ளியில் இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்தது. பள்ளியில் படிக்கும் போதே கால்பந்து, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் அணிகளின் கேப்டனாக இருந்துள்ளார். மேலும் கிரிக்கெட்டில் ரஞ்சி டிராபியில் டாப் ஆர்டர் பேட்டராக பரோடா அணிக்காக விளையாடி உள்ளார் சமர்ஜித்சிங் கெய்க்வாட். இவர் 1987/88 மற்றும் 1988/89 ஆகிய சீசன்களில் பரோடா அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியை ஏற்றார்.