தொலைபேசியில் பல புகைப்படங்களை சேமித்து வைத்திருப்போம். அவை சில நேரங்களில் தவறுதலாக நீக்கப்பட்டு விடும். அவற்றை எப்படி மீட்டெடுப்பது என்பதை அறிந்து கொள்ளலாம். உங்கள் Google கணக்கிலிருந்து ஒரு புகைப்படம் நீக்கப்பட்டால், அதை மீண்டும் மீட்டெடுக்கலாம் என்பது நிம்மதியான விஷயம். Google Photos-லிருந்து ஒரு புகைப்படத்தை நீக்கினால், அது தானாகவே ட்ராஷ் போல்டருக்குச் செல்லும்.
பேக்-அப் செய்யப்பட்ட நீக்கப்பட்ட படங்கள் 60 நாட்களுக்கு ட்ராஷ் போல்டரில் இருக்கும், பேக் அப் செய்யப்பட்டாத புகைப்படங்கள் 30 நாட்களுக்கு ட்ராஷ் ஃபோல்டரில் இருக்கும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உங்கள் ட்ராஷ் ஃபோல்டரில் இருந்தால் மட்டுமே அவற்றை மீட்டெடுக்க முடியும். ட்ராஷ் ஃபோல்டரில் காலி செய்துவிட்டால், அதன் உள்ளடக்கங்களை மீட்டெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக, Google சப்போர்ட் வெளியிட்டுள்ள தகவலில், நீங்கள் 2 வருடங்கள் அல்லது அதற்கு மேல் Google புகைப்படங்களில் செயலில் இல்லை என்றால், நீக்கப்பட்ட புகைப்படங்களை உங்களால் மீட்டெடுக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள்புகைப்படம் அகற்றப்படலாம். இதேபோல், உங்கள் சேமிப்பக வரம்பை 2 வருடங்கள் அல்லது அதற்கு மேல் தாண்டியிருந்தால், புகைப்படங்கள் உட்பட உங்களின் அனைத்து உள்ளடக்கமும் நீக்கப்படும்.
நீக்கப்பட்ட புகைப்படங்களை எவ்வாறு திரும்பப் பெறுவது:
ட்ராஷ் ஃபோல்டரை சரிபார்ப்பதன் மூலம் மீட்டெடுத்தல்:
ட்ராஷ் ஃபோல்டரிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படத்தை மீட்டெடுக்க, நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் படத்தைக் கண்டறியவும். இதைச் செய்ய, ‘Restore’ விருப்பத்தை கிளிக் செய்யவும். புகைப்படம் உங்கள் ஃபோன் கேலரியில் அல்லது Google புகைப்படங்கள் லைப்ரரியில் மீட்டமைக்கப்படும்.
ஆர்சிவ் போல்டர் உதவியுடன் மீட்டெடுத்தல்
சில நேரங்களில் மக்கள் தற்செயலாக தங்கள் புகைப்படங்களை காப்பகப்படுத்துகிறார்கள் மற்றும் அவர்கள் அவற்றை நீக்கிவிட்டதாக நினைக்கிறார்கள். காணாமல் போன புகைப்படங்களுக்கான காப்பகக் கோப்புறையைச் சரிபார்ப்பது உதவியாக இருக்கும். காப்பகக் கோப்புறையில் உங்கள் தொலைந்த புகைப்படங்களைக் கண்டால், ‘Unarchive’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். புகைப்படம் கேலரியில் மீட்டமைக்கப்படும்.
Google சப்போர்ட் உதவியுடன் மீட்டெடுத்தல்
1. உங்கள் நீக்கப்பட்ட புகைப்படங்களை Google ட்ரைவில் சேமித்து வைத்திருந்தால், அவற்றை மீட்டெடுக்க Googleளைக் கோரலாம்.
2. Google ட்ரைவுக்கு சென்று உதவிப் பக்கத்தைக் கிளிக் செய்யவும். உதவிப் பக்கத்திலிருந்து ‘Missing or deleted files’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3. இப்போது நீங்கள் ஒரு பாப்-அப் பெட்டியில் இரண்டு விருப்பங்களைப் பெறுவீர்கள். முதல் விருப்பம் ‘‘request chat’ மற்றும் இரண்டாவது ’email support’. உங்களுக்கு பொருத்தமான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
4. புகைப்படம்/கோப்பை மீட்டமைக்க உங்களுக்கு ஏன் Google தேவை என்பதை விளக்குங்கள். இது சாத்தியமானால், Google நீக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.