சுகாதார சேவையின் ஆளணி வளத்தை அதிகரிப்பதற்காக சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவின் ஆலோசனைக்கிணங்க 475 புதிய வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியினை ஆரம்பிப்பதற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று (01) கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால தலைமையில் இந்நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் 25 புதிய வைத்தியர்களுக்கு உத்தியோகபூர்வமாக மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வாறு நியமனம் கிடைக்கப்பெற்ற புதிய வைத்தியர்கள் நாடு பூராகவும் உள்ள 68 அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு வருட பயிற்சிக்காக இணைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டி வைத்தியம் பீடங்களில் 05 வருட காலம் கல்வி செயற்பாடுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இத வைத்தியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சரின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைப்பின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித்த மஹிபால “உலகளாவிய தரவுகளின் படி நோயாளிக்கு வழங்கப்படும் மருந்துகளால் ஏற்படும் சிக்கல்களினால் நூற்றுக்கு இருபது வீதமானர்வர்கள் வைத்தியசாலைகளுக்கு வருகை தருவதாகவும், நாட்டிலுள்ள வைத்தியசாலைகளிலுக்கும், அவ்வாறான நோயாளிகள் வருவதாகவும், அவ்வாறே வைத்தியசாலைகளில் தங்கி இருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையின் வைத்தியசாலைகளில் அதிகரித்து காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இவை அனைத்தையும் பார்க்கும் போது நோயாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தர உத்தரவாதம் (Quality Assurance), நோயாளர்களின் பாதுகாப்பு (Patient Safety) என்பவற்றுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலை திட்டங்களை பலப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
ஒரு வருட கால மட்டுப்படுத்த பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் வைத்தியர்கள் இலங்கை மருத்துவ சங்கத்தில் முழுமையான பதிவிற்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
குழுவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன என பல சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ பீட அதிகாரிகளும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்