Indian 2: "பொருத்தமான ஸ்கிரிப்ட் அமைந்தால்…" – ஷாருக்கானை இயக்குவது குறித்து இயக்குநர் ஷங்கர்

பிரமாண்ட பொருட்செலவில் இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் ‘இந்தியன் 2’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தியில் இத்திரைப்படம் `இந்துஸ்தானி 2′ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் ஊழல் குறித்துப் பேசியிருந்தது.

சேனாதிபதி – இந்தியன் 2

தற்போது இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். ஜூலை 12 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருப்பதாக ஷங்கர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசியிருக்கும் ஷங்கர், “ரோபோ (எந்திரன்) படத்திற்குப் பிறகு வேறு சில படங்களுக்காக ஷாருக் கானை ஓரிரு முறை சந்திருக்கிறேன்.

ஷங்கர்

ஆனால் அது எதுவும் சரியாக கைகூடவில்லை. ஆனால் ஷாருக் கானிற்கு பொருத்தமான ஸ்கிரிப்ட் வந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவரை வைத்து படம் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.