Samantha: "ஆரோக்கியமில்லாத பொருள்களின் விளம்பரங்களில் நடித்தீர்களே?"-ரசிகர் கேள்விக்கு சமந்தா பதில்!

மயோசைட்டிஸ் பாதிப்பால் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்துக்கொண்ட நடிகை சமந்தா, நீண்ட ஓய்விற்குப் பிறகு கடந்த ஆண்டுதான் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ‘Citadel’-இன் இந்தி ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர். சிறிது காலத்திற்கு எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறியிருந்தார். தற்போது, ஓய்விலிருந்து திரும்பி வந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமந்தா

சமீபத்தில் ‘ஐஎம்டிபி’யின் 100 பிரபலங்கள் பட்டியலில் 13 வது இடத்தைப் பிடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளைப் பதிவிடுவது, புகைப்படங்களைப் பகிர்வது என்று ஆக்டிவாக இருக்கிறார் சமந்தா. அந்த வகையில் தற்போது ஆரோக்கியம் தொடர்பான காணொளிகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், “இதற்கு முன் நீங்களே ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் பொருள்களை விளம்பரம் செய்தீர்கள் அல்லவா?” என்று சமந்தாவிடம் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த அவர், “இதற்கு முன் நான் சில தவறுகள் செய்தது உண்மைதான்.

சமந்தா

ஆனால் அவையெல்லாம் முழுமையாக எனக்குத் தெரியாமல் செய்த தவறுகள். உண்மை தெரிந்த பிறகு அதுபோன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்புணர்வுடன் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.