உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Mr.Abdur rahim siddiqui உள்ளிட்ட உலக உணவுத்திட்ட அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றிணை நேற்று (02.07.2024) மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகைதந்து கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகள், உணவு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள்,அரசாங்கத்தினால முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி சார்ந்த முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசேட திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

மேலும் உலக உணவுத்திட்ட பிரதிநிதி என்ற வகையில் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டம் எதிர்பார்க்கின்ற விடயங்களை மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடமும் மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளரும் சமுர்த்தி திணைக்கள பதில் பணிப்பாளருமாகிய அ.கேதீஸ்வரன் அவர்களிடமும் கேட்டறிந்துகொண்டனர்.

இக் கலந்துரையாடலின் பின்னர் கனகாம்பிகைக்குளம் பிரதேசத்திற்கான களவிஜத்தினை மேற்கொண்டிருந்தனர்.

உலக உணவுத்திட்டத்தின் கீழ் தோட்டச்செய்கையினூடாக
பாடசாலைகளுக்கு வழங்கும் உணவுகளுக்கு மரக்கறிகளை வழங்கும் பொருட்டு உலக உணவுத்திட்டத்தின் ஊடாக வாழ்வாதார உதவிகள் கிடைக்கப்பெற்று திறமையாக செயற்பட்டு வருகின்ற கனகாம்பிகை பிரதேசத்தை சேர்ந்த விவசாயியின் தோட்டத்தை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.