கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக எதிர்க்கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரம் குறித்து மிகவும் மனவேதனையாக உள்ளது

இலங்கையை அவதானித்துக் கொண்டிருக்கும் இரு தரப்பு கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக பிரான்ஸ் கம்பனி மற்றும் சீனாவின் எக்சிம் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்தரையாடல் வெற்றியளித்தமை தொடர்பாக எதிர்க்கட்சியினால் செய்யும் பிரச்சாரம் தொடர்பாக மிகவும் மனவேதனையாக உள்ளது என்றும், கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு இணங்க சர்வதேச நாணய நிதியத்தினால் அதிகரிக்கப்பட்ட கடனுதவியின் கீழ் இந்த நாடு செயற்படுத்தப்படுகின்றது என்றும் வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மனங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்டார்.

உலகில் காணப்படும் கொடுப்பனவு தொடர்பாக கலந்துரையாடுதல் என சகல முன்னெடுப்புக்களும் மிகவும் கடினமான செயலாக மேற்கொண்டு வெளிநாட்டு விசேட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும், அதன்படி பிரான்ஸ் நாட்டின் லஸாட் கம்பனி மற்றும் சட்ட ஆலோசனை நடவடிக்கைகளுக்கா க்ளிபேர்ட் ஹான்ஸ் கம்பனியும் நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான வேலை திட்டம் ஒன்றை பின்பற்றாவிட்டால் தற்போது நாட்டின் மக்களுக்கு எண்ணெய், எரிபொருள் மருந்து, உணவு இன்றி மிகவும் சிக்கல் நிலை ஏற்படக்கூடியதாகக் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (02) காலையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த நாட்டின் சகல அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் நாட்டிற்கு நாட்டில் பற்றுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய ஒருமைப்பாடொன்றை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு அழைப்பு விடுத்தார்.

ஏனெனில் நாட்டில் பாரிய சிக்கலாக வெளிநாட்டு கடன்களை செலுத்தப்பட முடியாமை காணப்பட்டதாகவும், 2032 ஆம் ஆண்டாகும் போது முழுமையாக கடன் செலுத்த முடியாமையின் அளவு தலா உள்நாட்டு உற்பத்தியின் அளவை விட குறைவானதாகவும் அதனை அண்மிக்காத வகையிலும் பேணுவதற்கு கடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கடன் பெற்றுக்கொள்வதாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும் நிதித் தேவையின் அளவு தலா தேசிய உற்பத்தியில் 13% வீதத்தை அண்மிக்காமை என்ற விடயம் எந்த அரசாங்கம் ஒன்று, எந்த ஜனாதிபதி ஆட்சி செய்தாலும், அடிப்படை இலக்கை அடைந்து கொள்ளக் கூடியதாக கடன் மறு சீரமைப்பு ஒப்பந்தத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் எதிர்கால சமுதாயத்திற்காக கையெழுத்து இடப்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.

நாட்டிற்காக நாட்டின் எதிர்கால சந்ததிக்காக மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு இணங்க செயற்படுவதற்கு ஒன்று இணைந்து பணியாற்றுமாறு ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியதாகவும் அமைச்சர் வந்துள்ள குணவர்தன தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.