பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூலை 5 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ள புதிய சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் ஆனது உலகில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகின்றது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டும் தனித்தனியாக சேமிக்கப்படுவதுடன் இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று மாற்றிக் கொள்ளும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட டீசரில் சுவிட்சுகள் ஆனது கொடுக்கப்பட்டு சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டுக்கும் மாற்றும் வகையில் உள்ளது. கூடுதலாக தட்டையான இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு, வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் மற்றும் பஜாஜ் லோகோவும் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பே வெளிவந்த சோதனை ஓட்ட படங்கள் மூலம் முதலில் 125சிசி க்கு இணையான பைக் சிஎன்ஜி பிரிவில் ஃப்ரீடம் என்ற பெயரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடல் மிகச் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் பெட்ரோல் மாடல்களை விட கூடுதலாக 50 -60 % வெளிப்படுத்தும் என கூறப்படுவதனால் சுமார் 100 கிலோமீட்டருக்கு அதிகமாக பஜாஜ் ஆட்டோ உறுதி செய்ய வாய்ப்புள்ளது. முழுமையான விபரங்கள் ஜூலை 5 ஆம் தேதி வரவுள்ளது.