ஏதெரின் முதல் ஃபேமிலி மின்சார ஸ்கூட்டர் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகத்தை முக்கிய நகரங்களில் துவங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் விரிவுப்படுத்த உள்ளது. முதற்கட்டமாக டெல்லி, அகமதாபாத், புனே, ஜெய்ப்பூர், ஆக்ரா, லக்னோ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களிலும் ஆந்திரா மாநிலத்திலும் துவங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் விலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏத்தரின் பிரபலமான 450 சீரிஸ் மாடலில் இருந்த பெறப்பட்ட பேட்டரி மற்றும் மோட்டாரினை கொண்டுள்ள ரிஸ்டா ஸ்கூட்டரில் 2.9kWh மற்றும் 3.7kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று மூன்று விதமான வேரியண்டுகளில் ரூ.1.10 லட்சம் முதல் ரூ. 1.45 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) கிடைக்கின்றது.
4.3kW பவரை வெளிப்படுத்துகின்ற மாடல் 22 Nm டார்க் வழங்குவதுடன் இரு விதமான 2.9kwh, மற்றும் 3.7kwh பேட்டரி ஆப்ஷனை பெறுகின்றது. இதில் 2.9kwh முதற்கட்டமாக டெலிவரி துவங்கப்பட உள்ளதால் 123 கிமீ ரேஞ்ச் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 90 கிமீ முதல் 100 கிமீ வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
டாப் ரிஸ்டா இசட் வேரியண்டில் 3.7kwh பேட்டரி கொண்ட மாடலில் 160 கிமீ ரேஞ்ச் வழங்கப்பட்டுள்ளதால் உண்மையான ரேஞ்ச் 120-130 கிமீ வரை வெளிப்படுத்தலாம். ஸ்மார்ட் ஈக்கோ மற்றும் ஜிப் என இரு ரைடிங் மோடுகளை பெற்றுள்ள நிலையில் மணிக்கு அதிகபட்ச வேகம் 80 கிமீ ஆக இருக்கும்.
டிராக்ஷன் கண்ட்ரோல், மேஜிக் ட்வீஸ்ட் சார்ந்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பிற அம்சங்களுடன் 7 அங்குல கிளஸ்ட்டரை பெற்று ஏதெர் கனெக்ட் வசதிகளை பெற்றுள்ளது.
மேலும் ரிஸ்டா பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யலாம்.