ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பந்தரா (34). சென்னை அண்ணா நகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் 5-வது அவென்யூவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து புஷ்பந்தரா தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 5 லட்சம் பணம் டெபாசிட் செய்தார். […]