Bhole Baba சத்சங்கம்: நெரிசலில் பறிபோன 121 உயிர்கள்; காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் அருகில் உள்ள கிராமத்தில், உள்ளூர் மத குரு ஒருவரை கெளரவிக்கும் விதமாக சத்சங் எனும் மதப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. எஃப்.ஐ.ஆர் படி, ‘சத்சங்’ அமைப்பாளர்கள் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் கலந்துகொண்டனர்.

நாராயண் சாகர் விஷ்வ ஹரி

இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையில், சத்சங்கத்தை ஏற்பாடு செய்த சாமியார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

யார் இந்த நாராயன் சாகர் விஷ்வ ஹரி:

உத்தரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள பகதூர் நகரி கிராமத்தின் விவசாய தம்பதி நன்னே லால் – கட்டோரி தேவி ஆகியோருக்கு பிறந்தவர்தான் நாராயண் சாகர். இவரின் இயர்பெயர் சூரஜ் பால் சிங். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி, 1990-ல் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் தனது பெயரை நாராயண் சாகர் ஹரி என்று மாற்றிக்கொண்டார்.

ஹரியின் சீடர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாராயண் சாகருக்கு மேற்கு உத்தரபிரதேசத்தில் கணிசமான ஆதரவாளர்கள் பெருகினர். அதனால், தன் கிராமத்திலேயே ஒரு ஆசிரமம் ஒன்றை அமைத்தார். அந்த ஆசிரமத்துக்கு பிற மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் கூட, பக்தர்கள் வருவார்கள்; அவர்களுக்கு ஆசிரமத்தில் தங்குமிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாராயண் சாகருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. காவல்துறையைவிட்டு வெளியேறி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவரை போலே பாபா என்று மக்களால் அழைக்கப்படுவதாகவும், அவரின் மனைவி மாதாஸ்ரீ என்று அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

போலே பாபா – மாதாஸ்ரீ

இதற்கிடையில்,அவருக்கு எதிராக சதி நடப்பதாக சந்தேகித்த நாராயண் சாகர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தை விட்டு வெளியேறி ராஜஸ்தானில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு, மீண்டும் கிராமத்திற்குத் திரும்பிய அவர், தனது சொத்துக்களை தன் அறக்கட்டளையிடம் ஒப்படைத்து, மேலாளரை பணியில் அமர்த்தியிருக்கிறார். தற்போது, ஆசிரம விவகாரங்களை மேற்பார்வையிடுகிறார். தன்னை குருவாக அடையாளப்படுத்திகொள்ளும் நாராயண் சாகர், காவி உடைகளை அணியாமல், பெரும்பாலும் வெள்ளை நிற கோட் சூட், டை அணிந்திருக்கிறார்.

நாராயண் சாகர், தன் சொற்பொழிவுகளில், “ நான் புலனாய்வுத் துறையில் பணியாற்றினேன். அப்போதே எனக்கு ஆன்மீகம் மீது பெரும் காதல் ஏற்பட்டது. அதனால், என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சேவை செய்ய வந்துவிட்டேன். என் சொற்பொழிவுகளின் போது, வழங்கப்படும் நன்கொடைகளிலிருந்து எந்தத் தொகையையும் நான் சேமித்து வைப்பதில்லை. அதை எனது பக்தர்களுக்காக செலவிடுகிறேன்” எனக் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.