இனி ட்ரூகாலர் தேவையில்லை, எந்த நம்பரில் இருந்து அழைத்தாலும் காலர் பெயர் காட்டும்..!

மொபைல் போனுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், யார் அழைக்கிறார்கள் என்ற விவரத்தை தான் பார்ப்போம். நம்முடைய தொடர்பில் இல்லாதவர்கள் என்றால், அவர் யார் என்று தெரியாமல் எப்படி போனை எடுப்பது என்ற தயக்கம் இருக்கும். இதற்காகவே யார் அழைக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள மூன்றாம் தரப்பு செயலியான ட்ரூ காலரை பலரும் பயன்படுத்தி வந்தனர். இப்போது அந்த செயலி தேவை இருக்காது.  உங்கள் தொடர்பில் இல்லாதவர்கள் அழைத்தால் கூட ஆட்டோமேடிக்காக அழைப்பவரின் பெயர் இனி தெரியும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இது தொடர்பாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மும்பை மற்றும் ஹரியானா வட்டாரங்களில் டெலிகாம் நிறுவனங்கள் சோதனையைத் தொடங்கியுள்ளன. ஆரம்ப கட்டத்தில் இருக்கும் Calling Name Presentation’ (CNP) எனும் இந்த வசதியின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஜூலை 15 முதல் நாடு முழுவதும் இந்த புதிய வசதி விரிவுபடுத்தப்பட இருக்கிறது. 

அழைப்பவர்களின் பெயர் எப்படி தெரியும்?

சிம் வாங்கும்போது ஒவ்வொருவரும் ஆவணங்களை நிச்சயம் சமர்பித்திருப்பார்கள். அந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு, யார் அழைப்பு மேற்கொண்டாலும் அவர்களுடைய விவரம் மொபைல் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும்.  ஸ்பேம், மோசடி அழைப்புகள் மற்றும் சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த சேவை தொடங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அழுத்தத்திற்குப் பிறகு, டெலிகாம் நிறுவனங்கள் இந்த சோதனையைத் தொடங்கியிருக்கின்றன. 

CNP சேவை எப்படி செயல்படும்?

உங்களுக்கு ஒரு கால் வருகிறது என்றால் அப்போது மொபைல் எண்ணுடன் அழைப்பவரின் பெயரும் தெரியும். சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதைக் கருத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஸ்பேம் அழைப்புகளை முழுமையாக நிறுத்துவதில் வெற்றி கிடைக்கும். ஸ்பேம் அழைப்புகள் நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. ஒரு கணக்கெடுப்பின்படி, 60 சதவீத மக்கள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு 3 ஸ்பேம் அழைப்புகளைப் பெறுகிறார்கள் என தெரிவிக்கிறது.

போலி சர்வதேச அழைப்புகள் நிறுத்தம்

சமீபத்தில், அந்த போலி சர்வதேச அழைப்புகள் அனைத்தையும் தடுக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதில் அழைப்பு வரும்போது இந்திய எண்கள் தெரியும். இது தொடர்பான புகார்களை தொலைத்தொடர்பு துறை (டிஓடி) பெற்று வந்தது. இந்த அழைப்புகள் மூலம் மக்களிடம் சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடிகள் செய்யப்படுகி

ன்றன. CNP சேவை அறிமுகமானதும் இந்த மோசடிகளுக்கும் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.