கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (04) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த எஸ்.முரளிதரன், முன்னாள் அரசாங்க அதிபரான றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்றுச்சென்ற பின்னர் அமைச்சரவை அனுமதிக்கமைவாக 15.03.2024ம் திகதியிலிருந்து கடமை நிறைவேற்று அரசாங்க அதிபராக பணியாற்றிவந்தார்.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் நியமிக்கப்பட்டு, அவருக்கான நியமனக்கடிதம் நேற்று (03) தினேஷ்குணவர்தனவினால் பிரதமர் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் அவர்கள் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் தெல்லிப்பளை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.