சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் வசித்து வருபவர் பிரிசில்லா மனோகரன் (வயது 33). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்தார். வக்கீல் எனக்கூறி கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் போலியாக இறந்ததாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டது உள்ளிட்ட மோசடியில் அவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அவர்மீது ஏராளமான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிங்கப்பூர் கோர்ட்டில் பிரிசில்லா மனோகரன் தொடர்பான மோசடி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
Related Tags :