தரமான மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட 75 மில்லியன் ரூபாய் செலவில் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பக்கவாத நோய்க்கான சிகிச்சை பிரிவு நேற்று முன்தினம் நோயாளர்களுக்கு குணப்படுத்தும் சேவையை வழங்குவதற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
தென் மாகாணத்தின் ஒரே ஒரு மற்றும் முதலாவது பக்கவாத நோய் சிகிச்சை பிரிவான இந்த பிரிவை நிர்மாணிக்கம் வேலை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் செயல்பாடுகளை காளி மாவட்ட மருத்துவர்கள் சங்கம் மேற்கொண்டிருந்தது.
பக்கவாத நோய் சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையடிக்கப்பட்டதன் பின்னர் பிரிவை மேற்பார்வை செய்த சுகாதார அமைச்சரினால் முதலாவது நோயாளி உள்வாங்கப்பட்டதுடன், இப்பிரிவின் நிர்மாணப் பணிகள் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பணிகள் இடைநிறுத்தப்பட்டு நிர்வாண செயற்பாடுகள் மீண்டும் கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் வேறு நோய் பிரிவின் கீழ் இந்த பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், பக்கவாத நோயாளிகள் வேறு நோய் நிலைமைகளை விட நோயாளி அங்கவீன நிலையை அடைவதற்கு எதுவாக அமைந்துள்ளது.
தற்போது கொழும்பு, குருணாகல், கண்டி போன்ற அரசாங்க வைத்தியசாலைகளில் பக்கவாத சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் நோய் சிகிச்சை சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன;…..
தற்காலத்தில் தொற்றால் நோய்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அவை தற்போது சிக்கலான நிலைமை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டில் சுகாதார அமைச்சின் வரவு செலவு திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புனர்நிர்மான பிரிவு மற்றும் நிவாரண சிகிச்சை பிரிவு என்பவற்றை நிறுவுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் பக்கவாத நோய்ப் பிரிவு ஒவ்வொரு மாகாணத்திலும் அன்றி தேசிய ரீதியாக நிறுவப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தான் சுகாதார அமைச்சைப் பொறுப்பெடுத்து தற்போது 8 மாத காலங்கள் அண்மித்துள்ளதுடன், அமைச்சை பொறுப்பெடுக்கும் போது காணப்பட்ட பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்காக விசாரணை திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாகவும் வலியுறுத்திய அமைச்சர் சகல சுகாதார சேவை ஊழியர்களுக்காகவும் ஏதேனும் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
சுகாதார சேவையில் அதிகமானவர்கள் காணப்படும் தாதிச் சேவைக்காக பிரதிப் படிப்பாளர் நாயகன் பதவியை உருவாக்குவதற்கு நாட்டில் பதினெட்டாவது பல்கலைக்கழகமாக தாதிப் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தினிப்பிரியா ஹேரத், கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ் டி யு எம் ரங்க, காலி மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் விமலஸ்ரீ உழுவக்ககே உட்பட விசேட வைத்தியர்கள் மற்றும் மருத்துவர்கள் சுகாதார சேவைப் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்