நாடு திரும்பிய இந்திய அணி… கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி – அதிர்ந்தது ஏர்போர்ட்!

Team India Back Home: அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் கடந்த ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை 9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) நடைபெற்றது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. 

கடந்த சனிக்கிழமை அன்று நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி (Team India) டி20 உலகக் கோப்பையை 17 வருடங்களுக்கு பின்னர் கைப்பற்றியது. சுமார் 11 ஆண்டுகளாக நீடித்து வந்த ஐசிசி கோப்பை தாகத்தையும் இந்திய அணி தீர்த்து வைத்தது. உலகக் கோப்பையை வென்ற கையுடன் இந்திய அணியால் நாடு திரும்ப இயலவில்லை. 

It’s home #TeamIndia pic.twitter.com/bduGveUuDF

— BCCI (@BCCI) July 4, 2024

சிறப்பு விமானம்

பார்படாஸ் நகரில் பெரில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்நாட்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதால், விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் நான்கு நாள்களாக பார்படாஸில் சிக்கிய இந்திய அணி, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் இன்று காலையில் நாடு திரும்பியது. 

#WATCH | Captain Rohit Sharma with the #T20WorldCup trophy at Delhi airport as Team India arrives from Barbados, after winning the T20I World Cup.

(Earlier visuals) pic.twitter.com/ORNhSBIrtx

— ANI (@ANI) July 4, 2024

தலைநகர் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தின் முன் திரண்டு வீரர்களுக்கு தங்களின் வாழ்த்துகளை ஆரவார கோஷங்களுடன் தெரிவித்தனர்.

பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இந்திய அணி வீரர்கள் பிரபல ஐடிசி மயூரா ஹோட்டலுக்கு சென்றனர். அங்கும் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு என சிறப்புவாய்ந்த கேக் மற்றும் வரவேற்பு பானங்கள் அளிக்கப்பட்டன. இந்திய  அணி வீரர்கள் அடுத்து இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளனர். அதன்பின்னர் மீண்டும் ஹோட்டல் திரும்புகின்றனர்.

மும்பையில் ரோட் ஷோ

அதை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு இந்திய அணி வீரர்கள் இன்று மும்பை செல்கின்றனர். மும்பையில் டி20 உலகக் கோப்பையுடன் வீரர்கள் ரோட் ஷோ நடத்துகின்றனர். தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.  

கொண்டாட்ட தருணம்

இந்திய அணி இதற்கு முன் கடைசியாக மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2013ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பின் இப்போதுதான் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறது. எனவே இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு கொண்டாட்ட தருமணமாக அமைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அன்று அகமதாபாத் நகரில் நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் படுதோல்வி அடைந்து இந்திய அணி கடும் ஏமாற்றத்தை அளித்தது. 

ஆஸ்திரேலியாவிடம் அடைந்த அந்த தோல்வியில் இருந்து மீண்டு இந்திய அணி தற்போது அதே ரோஹித் சர்மா தலைமையில் அந்நிய மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்று திரும்பியுள்ளது. இது இந்திய அணிக்கும், இளம் வீரர்களுக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கும். ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.