திருகோணமலை இரணைகேணி, நிலாவெளி, முல்லைத்தீவின் கொக்கிளாய், வெத்தலகேணியின் சளை, ஏறக்கண்டி மற்றும் திருகோணமலை எலிசபெத் முனை ஆகிய கடற்பரப்புகளில் 2024 ஜூன் 30 முதல் ஜூலை 03 வரை மேற்கொள்ளப்பட்ட தொடர் தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத வலைகள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 பேருடன் 07 டிங்கி படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, 2024 ஜூன் 30 ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கைக் கடற்படைக் கப்பல் வலகம்பா நிருவனத்தின் கடற்படையினரால் திருகோணமலை, இரணைகேணி கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் ஒரு டிங்கி படகும் (01), 2024 ஜூலை 01 ஆம் திகதி திருகோணமலை நிலாவெளி கடற்பகுதியில் இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) நபர்களுடன் ஒரு டிங்கி படகும் இலங்கை கடற்படை கப்பல் கோட்டாபய, ரன்வேலி மற்றும் விரைவு நடவடிக்கை படகுகள் படையணி ஆகிய இனைந்து முல்லைத்தீவு கொக்கிளாய் கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு பேருடன் (08) ஒரு டிங்கி படகு (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை கைது செய்தனர்.
மேலும், 2024 ஜூலை 03 ஆம் திகதி வடக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான கடற்படை நிலைப்படுத்தல் வெத்தலக்கேணியின் கடற்படையினர் சளை பிரதேச கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் இரண்டு டிங்கி படகுகளும், கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் மற்றும் விரைவு நடவடிக்கை படகுகள் படையணியினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேருடன் (07) ஒரு டிங்கி படகும், கடற்படை கப்பல்துறையினரால் திருகோணமலை, எலிசபெத் முனைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு பேருடன் (08) ஒரு டிங்கி படகு (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், குச்சவெளி, நிலாவெளி, புல்மூட்டை, ஏறக்கண்டி, திருகோணமலை, கிண்ணியா, வெலிஒய மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகர், முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர், யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம், திருகோணமலை மற்றும் கொட்பே கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன.