சீனாவின் டேலியன் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட அவர் அங்கு விஷேட உரை ஒன்றையும் நிகழ்த்தினார். இதன் சிறப்பம்சமாக அங்கு வருகைத் தந்திருந்த ஏனைய நாட்டு பிரமுகர்கள் முன்னிலையில் அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
இலங்கையில் பெருந்தோட்டத் துறையில் தொழில் முனைவோர் வீதம் 2.5% க்கும் குறைவாக காணப்படுகின்ற அதேவேளை, பெருந்தோட்ட சமூகத்தில் 30% ஆனவர்களுக்கே தரமான கல்வி கிடைக்கப் பெறுகின்றது. ஆகவே இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாம் தொழிற் பயிற்சி நிலையமொன்றை நிறுவியுள்ளோம், இதுவே இப்பகுதியில் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இலவச தொழிற் பயிற்சி நிலையமாக அமையப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எவ்வாறாயினும் எமக்கு 2000 முதல் 2005 வரையிலான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுகின்றது எனினும் அவற்றில் 674 விண்ணப்பங்களை மட்டுமே எங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமாக உள்ளது.
அத்தோடு, உலக வங்கியின் ஆதரவுடன் ஆரம்பக் கல்வியில் நிலவும் குறிப்பிடத்தக்க இடைவெளியை நாங்கள் கண்டறிந்து, அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் 1197 குழந்தை மேம்பாட்டு பராமரிப்பு நிலையங்களை(CDC) நிறுவியுள்ளோம். இந்த நிலையங்கள் பகல்நேர பராமரிப்பிற்க்கு அப்பாற்பட்டு, புதிய சிந்தனை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்காணித்தல், ஆரம்பகால வளர்ச்சிக்கான அத்தியாவசிய கருவிகளை வழங்குதல் ஆகியவற்றில் பங்களிப்பினை வழங்குகின்றன.
சமீபத்தில் நாங்கள் பல்வேறுபட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைக்கும் இளைஞர் மாநாட்டையும் (Youth Conference) ஏற்பாடு செய்திருந்தோம்.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சுய விபரக்கோவைகளை தயாரித்தல் மற்றும் நேர்காணல்களை மேற்கொள்ளல் போன்ற அடிப்படை திறன்கள் பற்றிய பல விடயங்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தினோம். இது பெரும்பாலும் குறைந்தமட்ட திறன்களைக் கொண்ட பள்ளிகளில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கான முக்கியமான தேவையை எடுத்துக்காட்டுகிறது.
இதில், திறன்களைப் பெற்றுக்கொள்வது மட்டும் போதாது. அந்த திறன்களை நடைமுறை பயன்படுத்துவதற்கான வழிகாட்டியாகவும் நாம் இருக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் குறிக்கோளினை அடைந்தவுடன், நீங்கள் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்தவும், அடையாளம் காணப்பட்ட தொழில்களுக்கு உங்களை தயார் செய்து கொள்வதும் அவசியம்.
நீங்கள் பெற்றுக்கொண்ட திறன்களைப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஒரு முழுமையான மாற்றத்தை அடையும்போது இந்த நடைமுறை பயன்பாடு இல்லாமல் முன்னேற்றம் அடைய முடியாது என்பதை உணர்வீர்கள் என்றும் அமைச்சர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.