தமிழ்நாட்டில் பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்கின் அறிமுகம் எப்பொழுது..!

உலகின் முதல் சிஎன்ஜி பைக்கினை வெளியிட்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஃப்ரீடம் 125 மாடலை 330 கிமீ ரேஞ்சை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் வெளிப்படுத்தும் நிலையில் தமழ்நாட்டில் விற்பனைக்கு எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  முதற்கட்டமாக மஹாராஷ்டிரா, குஜராத் என இரு மாநிலங்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மாடலில் உள்ள 125சிசி என்ஜின் அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இணைந்து 330 கிமீ மைலேஜ் வழங்கும் நிலையில் சிஎன்ஜி எரிபொருள் மட்டும் 1 கிலோவிற்கு 100 கிமீ மைலேஜ் என இரண்டு கிலோவிற்கு 200 கிமீ மற்றும் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிமீ வெளிப்படுத்துவனால் 130 கிமீ கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

டிரம், டிரம் உடன் எல்இடி மற்றும் டிஸ்க் பிரேக் என மூன்று விதமான வேரியண்ட்டை பெறுகின்ற ஃப்ரீடம் 125 விலை ரூ.95,000 முதல் ரூ.1.10 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) அமைந்துள்ளது. குஜராத்திலும் மஹாராஷ்டிராவிற்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களில் செப்டம்பர் 2024 அல்லது அக்டோபர் 2024 முதல் கிடைக்க துவங்கும்.

இந்தியா மட்டுமல்லாமல் ஃப்ரீடம் 125 மாடலை எகிப்து, தான்சானியா, கொலம்பியா, பெரு, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.