உலக ஆட்டோமொபைல் வரலாற்றில் முதன்முறையாக மோடார்சைக்கிளில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வகையில் ஃப்ரீடம் 125 பைக்கினை ரூ.95,000 விலையில் (எக்ஸ்-ஷோரூம்) பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம்மில் மிக இலகுவாக சிஎன்ஜிக்கும் பெட்ரோலுக்கு மாற்றிக் கொள்ளும் வகையிலான சுவிட்ச் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள இருக்கை மிக நீளமானதாக உள்ளதால் நான்கு நபர்கள் கூட அமரும் வகையில் இடம் இருந்தாலும் இரண்டு பேர் மட்டும் பயணிக்கலாம் என அறிமுகத்தின் பொழுது பஜாஜ் ஆட்டோவின் தலைவர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார்.
பஜாஜ் Freedom 125 CNG
125cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
இரண்டு லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி சிலிண்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இணைந்து தோராயமாக 330 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
கனெக்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் கூடிய எல்சிடி கிளஸ்டர் இந்த மாடலும் பெறுகின்றது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி கிடைக்கின்றது. மேலும் முன்புறத்தில் டெலஸ்கோபிக் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. இந்த மாடலுக்கு டிரம் பிரேக் பின்புறத்தில் மற்றும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
பஜாஜ் ஃப்ரீடம் பைக் மாடலின் விலை ரூ. 95,000 -1,10,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் முதற்கட்டமாக கிடைக்கின்றது.
Disc LED – ₹ 1.10 lakh
Drum LED – ₹ 1.05 lakh
Drum only variant – ₹ 95,000