பாராளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடும்

  • இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஜூலை 09
  • விலங்கின நலம்பேணல் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு விவாதம் ஜூலை 11

பாராளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா தலைமையில் அண்மையில் (03) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள விடயங்கள் பற்றித் தீர்மானம் எடுக்கப்பட்டது.

 

இதற்கமைய ஜூலை 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவிருப்பதுடன், ஜீ.எஸ்.எம்.பி தொழில்நுட்ப சேவைகள் (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2021), டவர் மண்டப அரங்கத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் (2021) மற்றும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2022) என்பன விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன. அத்துடன், மாத்தறை பருவம் அமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம், ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், சமாதி தியான மற்றும் யோகாசனம் நிலையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், இலங்கை வரைதல் தொழில்நுட்பவியலாளர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன இரண்டாவது மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ளன.

 

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக (அரசாங்கம்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

ஜூலை 10ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2366/38 மற்றும் 2369/32 ஆகிய இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட இரு அறிவித்தல்கள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2384/34 மற்றும் 2384/35 ஆகிய வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரு ஒழுங்குவிதிகள் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் 2377/41 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

 

இதனைத் தொடர்ந்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக (இரண்டு வினாக்கள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

ஜூலை 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை விலங்கின நலம்பேணல் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக (எதிர்க்கட்சி) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

ஜூலை 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புச் செடிகள் மற்றும் விலங்குகள் காரணமாக உயிரின் பல்வகைமைக்கு ஏற்படுகின்ற பாதிப்பைக் குறைத்தல் (கௌரவ புத்திக பத்திரண), விளையாட்டு அமைச்சின் கணக்காய்வு மற்றும் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (கௌரவ ரோஹன பண்டார), மதத் தீவிரவாதத்தைத் தடுப்பதன் அவசியம் (கௌரவ ஹேஷா விதானகே), க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் Z புள்ளி அடிப்படையில் அரசதுறை சார்ந்த சகல தொழில் வெற்றிடங்களையும் நிரப்புதல் (கௌரவ டலஸ் அழகப்பெரும), மலையகத் தொழிற்சங்கத் தியாகிகள் தினமொன்றைப் பிரகடனப்படுத்தல் (கௌரவ வேலு குமார்), இலங்கை மாணவர் சமுதாயம் தமது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வதன் பொருட்டு தேசிய தொழில் வழிகாட்டல்களை முறையாக வழங்குதல் (கௌரவ ரொஷான் ரணசிங்க) ஆகியன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

 

இதனைத் தொடர்ந்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக (இரண்டு வினாக்கள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.