இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் R 12, R 12 nineT ரோட்ஸ்டெர் என இரு மாடல்களும் முறையே ரூ.19.90 லட்சம் மற்றும் ரூ.20.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு மாடல்களிலும் பொதுவாக 1,170cc காற்று/ஆயில் கூல்டு பாக்ஸர் என்ஜின் பொருத்தப்பட்டு 7,000rpm-ல் அதிகபட்சமாக 110hp மற்றும் 6,500rpm-ல் 115Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
புதிய பிஎம்டபிள்யூ R 12 nineT மாடலில் பிரஷ் செய்யப்பட்டு பக்கவாட்டு பேனல்களை பெற்றுள்ள அலுமினியம் டேங்க், இருக்கை மற்றும் டெயில்-ஹம்ப் ஆகியவை பெற்றுள்ளது. மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.
பிஎம்டபிள்யூ R 12 பைக்கில், ஸ்டீல் டேங்க், 1970களின் BMW /5 மாடல்களின் “டோஸ்டர் டேங்க்ஸ்” என்று அழைக்கப்படுவதை நினைவூட்டுகிறது.
புதிய R 12 nineT மற்றும் புதிய R 12 என இரு மாடலிலும் முன் சக்கரத்தில், இரண்டு ரேடியல் பொருத்தப்பட்ட 4-பிஸ்டன் மோனோபிளாக் பிரேக் காலிப்பர்கள் மற்றும் 310mm கொண்ட இரட்டை டிஸ்க் பிரேக் நிலையான மற்றும் திறமையான பிரேக்கிங் சக்தியை வழங்குகிறது. பின் சக்கரத்தில் 2-பிஸ்டன் மிதக்கும் காலிபர் மற்றும் 265mm ஒற்றை டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்படுகிறது.